புதுப் பொலிவு பெறுகிறது யாஹூ மெயில்

பல நவீன வசதிகள் கொண்டதாகவும் புதிய தோற்றத்துடனும் தனது மெயில் சேவையை யாஹூ வெளியிடவுள்ளது. மிக வேகமான சேவை, புதிய கண்கவர் தோற்றம், குறைந்தளவிலான ஸ்பாம் என்பவவையே முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

தனது பாவனையாளர்கள் வேகமாக குறைந்து வருவதே இதற்கான முக்கிய காரணமாகும். யாஹூ மெயில் சேவையானது ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகியவற்றிற்கு ஏதுவான யூசர் இன்டர்பேஸினை உருவாக்கிவருகின்றது.

அப்பிளின் ஐஓஎஸ் மற்றும் அன்ரோயிட் இயக்குதளங்களில் வேகமாக இயங்குவதற்காக யாஹூ மெயிலானது முற்றிலுமாக எச்டிஎம்எல் 5 இன்டர் பேஸிற்கு நகரவுள்ளது.

டுவிட்டர் மற்றும் பேஸ்புக் என்பனவற்றுடன் யாஹூ இணைந்து மிகச் சுலபமாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும் தனது தேடல் பொறியையும் யாஹூ மேம்படுத்தவுள்ளது.

பாவனையாளர்கள் இதன் மூலமாக அதிகமான தகவல்கள் சிறப்பான புகைப்படங்கள் வீடியோக்கள் என்பனவற்றையும் பெறக்கூடியதாகவிருக்கும்.


2 comments :

ம.தி.சுதா at September 24, 2010 at 7:12 PM said...

இப்பவே ஒண்ணு திறந்தால் போய்விட்டது...
வாழ்த்துக்கள் சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

Unknown at October 28, 2010 at 6:16 AM said...

யாஹு நிறுவனத்திற்கு முதல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.. யாஹூ நிறுவனம் நேற்று ஒரு மைக்ரோ சொப்ட் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்துட்டுள்ளது என்பதையும் உங்களது வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes