ஒருவருக்கு உரிமையான ஐ–போனை அடுத்தவர் பயன்படுத்த முடிந்தால், கண்டறிந்து இயங்காமல் இருக்கக் கூடிய தொழில் நுட்பத்தினை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து, அதன் காப்புரிமைக்கு மனுச் செய்துள்ளது.
இந்த தொழில் நுட்பம் ஐ போன் ஒன்றின் உரிமையாளரின் முக அமைப்பு, குரல் மற்றும் இதயத் துடிப்பினை அளந்து அறிந்து கொள்கிறது. இவற்றின் அடிப்படையில் பல செயல்பாடுகளை, ஆப்பிள் நிறுவன சர்வர் மேற்கொள்கிறது.
வேறு எவரும் பயன்படுத்த முயற்சிக்கையில் போனின் செயல்பாட்டை முடக்குகிறது. திருட்டுத்தனமாகப் பயன்படுத்துகையில், பயன்படுத்தும் இடத்தினை அறிந்து கொண்டு பதிந்து கொள்கிறது.
அனுமதிக்கப்பட்ட கூடுதல் வசதிகளை மட்டுமே பயன்படுத்த வழி தருகிறது. ஐபோனின் வரையறைகளை திருட்டுத்தனமான சாப்ட்வேர் (ஜெயில் பிரேக்கிங்) மூலம் யாரேனும் மாற்றி இருந்தால் உடனடியாகக் கண்டறிந்து பயன்பாட்டினை முடக்குகிறது.
ஆனால் இந்த தொழில் நுட்பம் வாடிக்கையாளர்களின் தனி நபர் உரிமையில் தலையிடுவதாக சிலர் கண்டித்துள்ளனர்.
0 comments :
Post a Comment