விண்டோஸ் 10 (Windows 10) க்கு மாறப்போறீங்களா?

2015 ஆம் ஆண்டின் மிகப் பெரிய தொழில் நுட்ப சாதனமாக இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக இருக்கும், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம், அனைத்து தனிநபர் பயன்பாட்டிற்கும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினை, காசு கொடுத்து வாங்கியிருந்தாலும், திருட்டுத்தனமாக நகலெடுத்துப் பதிந்து இயக்கி வந்தாலும், அவர்கள் விண்டோஸ் 10 சிஸ்டத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் மேலும் ஒரு தெளிவினை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

விண்டோஸ் 10 சிஸ்டத்தினை ஒரே முயற்சியில் தங்களுடைய கம்ப்யூட்டர்களில் அப்கிரேட் செய்திட, விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் அதன் எஸ்.பி. பேக்கேஜ் 1 மற்றும் விண்டோஸ் 8.1 கொண்டிருக்க வேண்டும். இவர்கள் ஒரே முயற்சியில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் இறக்கிப் பதிவு செய்து கொள்ளலாம்.

அப்படியானால், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டத்தினை அப்படியே முதல் முறை பெற்ற நிலையில் இன்னும் வைத்து இயக்கிக் கொண்டிருப்பவர்கள் என்ன செய்திட வேண்டும்? என்ற கேள்வி எழலாம். 

இவர்கள் முதலில், விண்டோஸ் 7 சிஸ்டத்தையும் விண் 8 சிஸ்டத்தையும் முதலில், இன்றைய நிலைக்கு அப்கிரேட் செய்திட வேண்டும். இவர்கள் விண்டோஸ் 10 சிஸ்டம் தேடிச் சென்றால், முதலில் இந்த ஏற்பாட்டினை மேற்கொள்ளுமாறு, மைக்ரோசாப்ட் இவர்களுக்கு வழி தரும். அந்த வழியை மேற்கொண்டு, விண் 7 மற்றும் விண் 8 அப்கிரேட் செய்த பின்னரே, விண் 10 பெற முடியும். 

முதலில் விண்டோஸ் 10 சிஸ்டம் ஓராண்டுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது. இப்போது அதற்குப் பின்னரும் எந்தவிதச் சேவை கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது. 

விண்டோஸ் 10 சிஸ்டத்தினை முதன் முதலாக வாங்குவோர் கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும். இதற்கான முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். நிறுவனப் பயன்பாட்டிற்கு விண்டோஸ் 10 இலவசமாகக் கிடைக்காது. அவர்கள் இதற்கான கட்டணத்தைச் செலுத்தி, உரிமங்களைப் பெற வேண்டும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes