ஸ்ட்ரங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்

வீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம்? வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும்.

அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர் களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.


1. தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற் கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம்.

இவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.

2. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.

3. பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே. இதனை d*uBi(dU(bi என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம்.

4. பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே.


7 comments :

Unknown at October 30, 2011 at 3:54 PM said...

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // at October 30, 2011 at 4:16 PM said...

பயனுள்ள தகவல்...
நன்றி

ஜோசப் இஸ்ரேல் at October 30, 2011 at 5:30 PM said...

நல்ல பயனுள்ள தகவல்

குறையொன்றுமில்லை. at October 30, 2011 at 5:36 PM said...

பயனுள்ளதகவலுக்கு நன்றி

MaduraiGovindaraj at October 31, 2011 at 9:36 AM said...

பயனுள்ளதகவலுக்கு நன்றி

முனைவர் இரா.குணசீலன் at October 31, 2011 at 3:37 PM said...

பயனுள்ள தகவல் நண்பா...

முனைவர் இரா.குணசீலன் at October 31, 2011 at 3:38 PM said...

கடவுச்சொல்லை போதிய கால இடைவெளியில் மாற்றுவது மிகவும் தேவையான ஒன்று..

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes