போட்டோக்களைப் போட்டுக் காட்டவும், பிளாக்குகள் எனும் வலைமனை அமைக்கவும் கூகுள் வழங்கிடும் வசதி பிகாஸா மற்றும் பிளாக்கர் (Picasa & Blogger) ஆகும்.
இந்த இரண்டு வசதிகளும் கூகுள் நிறுவனம் தான் வழங்குகிறது என்று அறியாமலேயே பலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே இவற்றின் பெயர்களை, (Google Photos & Google Blogs) கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் பிளாக்ஸ் என மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.
இது குறித்து கூகுள் நிறுவனத்திடம் இருந்த எந்தவிதமான அதிகாரபூர்வ அறிக்கை இல்லை என்றாலும், இவற்றின் பெயர்களை மாற்றி, தற்போது கூகுள் அறிமுகப்படுத்தி இருக்கும் கூகுள் ப்ளஸ் வசதியுடன் இவற்றை இணைக்க கூகுள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
முன்பு 2007ல் வாங்கிய VoIP service GrandCentral என்ற வசதியை, Google Voice என 2009ல் கூகுள் பெயர் மாற்றம் செய்தது.
பிகாஸாவை 2004லும், பிளாக்கரை 2003ல் பைரா லேப்ஸ் (Pyra Labs) வாங்கும் போதும் கூகுள் பெற்றது.
1 comments :
நல்ல தகவல்!
நன்றி.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com
Post a Comment