வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி அதில் மாற்றங் களை ஏற்படுத்தி, மாற்றங்களாகவே வைத்திருந்து, அவற்றைத் தேவைப் பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வதாகும். ஒருவர் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிப் பின்னர் அதில் சில மாற்றங்களையும் ஏற்படுத்தலாம்.
ஏற்படுத்திய மாற்றங்களுடன், அந்த டாகுமெண்ட்டை, அலுவலகத்தில் உள்ள மற்றவர்களும் பார்க்கும் வகையில் அனுப்பலாம். ஆனால், தான் ஏற்படுத்திய மாற்றங்களை மற்றவர்கள், டாகுமெண்ட்டில் இணைக் கவோ அல்லது நீக்கவோ கூடாது என விரும்பலாம்.
இது சாத்தியமா? இது போல ஏற்படுத்திய மாற்றங்களை, அவர் மட்டுமே நீக்கவும், இணைக்கவும் முடியும் வகையில், அந்த டாகுமெண்ட்டிற்கு தடை போட முடியுமா?
வேர்ட் புரோகிராமில், இது போல மாற்றங்களை, அதனை ஏற்படுத்தியவர் மட்டுமே, நீக்கி இணைக்க வசதி தரப்பட்டுள்ளது. வேர்டின் பல புரோகிராம்களில் இதனை எப்படி செயல்படுத்தலாம் என்று இங்கு காணலாம்.
வேர்ட் 2000 வரை பயன்படுத்துபவர்கள், கீழ்க்காணும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.
1. சம்பந்தப்பட்ட டாகுமெண்ட்டினைத் திறந்து, Tools மெனு செல்லவும். வேர்ட் Protect Document டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இதில் Tracked Changes என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்கவும்.
4. பின்னர் ஓகே அழுத்தவும்.
5. மீண்டும் கேட்கப்படும்போது, பாஸ்வேர்டை மீண்டும் அமைக்கவும்.
6. இனி வழக்கம்போல பைலை சேவ் செய்திடவும்.
நீங்கள் வேர்ட் 2002 / 2003 பயன்படுத்து பவராக இருந்தால், கீழே கொடுத்துள்ள செயல்முறையை மேற்கொள்ளவும்.
1. மேலே காட்டியபடி டூல்ஸ் மெனுவில் Protect Document என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Protect
Document கட்டப் பிரிவு டாகுமெண்ட் விண்டோவின் வலது பக்கம் காட்டப்படும்.
2. இந்தக் கட்டத்தில், Editing Restrictions என்ற பிரிவு இருக்கும். இதில் Allow Only This Type of Editing
என்பதனைத் டாகுமெண்ட் செக் பாக்ஸில் தேர்ந்தெடுக்கவும். இங்கு வேர்ட் புரோகிராம், செக் பாக்ஸ் பிரிவில் கீழ் விரி மெனுவினைத்தரும்.
3. இந்த மெனுவில் Tracked Changes என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு Yes, Start Enforcing Protection என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், Start Enforcing Protection என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
5. இந்த டயலாக் பாக்ஸில் இருமுறை பாஸ்வேர்டினை அமைக்கவும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். பின்னர், வழக்கம் போல பைலை சேவ் செய்திடவும்.
நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்தினால், கீழ்க்கண்ட மாற்றங்களை மேற்கொள் ளவும்.
1.ரிப்பனில், Review டேப்பினைக் காட்டு மாறு செய்திடவும்.
2. Protect குரூப்பில் Protect Document டூலில் கிளிக் செய்திடவும். வேர்ட் Protect Document கட்டத்தினை
வலது பக்கம் காட்டும்.
3. இந்தக் கட்டத்தில் Editing Restrictions என்ற பிரிவில், டாகுமெண்ட் செக் பாக்ஸ் கட்டத்தில் Allow Only This Type of Editing என்பதைத் தேர்ந்தெடுக்கவும். செக்பாக்ஸ் கீழாக வேர்ட், கீழ்விரி மெனு
ஒன்றைக் காட்டும்.
4. கீழ் விரி பட்டியலில், Tracked Changes என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து, Yes, Start Enforcing Protection என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு வேர்ட் Start Enforcing Protection என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
6. இப்போது பாஸ்வேர்டை இருமுறை அமைக்க வேண்டியதிருக்கும். பின்னர் ஓகே கிளிக் செய்து, வழக்கம் போல பைலை சேவ் செய்திடவும்.
மேலே குறிப்பிட்ட பாதுகாப்பு வழியை அமைத்துவிட்டால், மற்றவர்கள், உங்கள் டாகுமெண்ட்டைப் பார்த்து, அவர்கள் விரும்பும் திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஆனால், நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவும், நீக்கவும், நீங்கள் அமைத்த பாஸ்வேர்ட் இருந்தால் மட்டுமே முடியும்.
1 comments :
பயன்னுள்ள தகவல்!.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com
Post a Comment