இந்தியாவில் பிளாக்பெர்ரி சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என பிளாக்பெர்ரி போன் தயாரிப்பு நிறுவனமான ரிசர்ச் இன் மோஷன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டெனிலி கென்னடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில், சேவை குறைபாடு குறித்த புகார்கள் அதிகளவில் வந்துள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்னால், சர்வதேச அளவில் பிளாக்பெர்ரி சேவை பாதிக்கப்பட்டது. தற்போது அதேநிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, விசாரணை மேற்கொண்டுள்ளோம்.
கூகுள் நிறுவனம், பிளாக்பெர்ரி போனில், ஜிமெயில் அப்ளிகேசனை இம்மாத இறுதியில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கூகுள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்
0 comments :
Post a Comment