வேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்


வேர்ட் புரோகிராம், விண்டோ ஒன்றைப் பிரித்து, ஒரே டாகுமெண்ட்டின் இரண்டு பகுதிகளில் செயல்பட வழி தருகிறது. 

அதே போல, இரண்டு பகுதிகளில் காணப்படும் வேர்ட் டாகுமெண்ட்டினை, இரு வேறு வியூக்களில் காணலாம். விண்டோவினைப் பிரிக்க, விண்டோ மெனுவில் Split என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 

வேர்ட் 2007 பயன்படுத்துபவர்கள், ரிப்பனில் வியூ தேர்ந்தெடுக்கவும். இதில் ஸ்ப்ளிட் என்பதில் கிளிக் செய்தால், விண்டோ இரண்டாகப் பிரிக்கப்படும். 

அப்போது, வேர்ட் திரையில், படுக்கைக் கோடு ஒன்றை அமைக்கும். மவுஸ் கொண்டு இதனை மேல், கீழாக நகர்த்தலாம். மவுஸ் பட்டனை எங்கு விட்டுவிடுகிறோமோ, அதே இடத்தில், விண்டோ பிரிக்கும் கோடும் அமர்ந்து கொள்ளும். 

விண்டோவினைப் பிரித்ததை ரத்து செய்திட வேண்டும் என்றால், எஸ்கேப் கீயை அழுத்தலாம். 

ஆனால், இதனை மவுஸ் பட்டனை, பிரிக்கும் கோட்டில் வைத்துச் செயல்படுத்தும் முன் மேற்கொள்ள வேண்டும். 

இல்லையேல், கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்பட வேண்டும். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஏதேனும் ஒன்றைப் பின்பற்றலாம்.

விண்டோ மெனுவிலிருந்து Remove Split என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, பிரிக்கும் கோட்டில், மவுஸ் கர்சரை வைத்து, டபுள் கிளிக் செய்திடவும்.

பிரித்த விண்டோவினை ஒன்றாக மாற்றுகையில், டெக்ஸ்ட்டில், கர்சர் எந்த விண்டோவில் இருந்ததோ, அந்த விண்டோவின் பண்புகள், டாகுமெண்ட்டுக்குத் தரப்படும். 

எடுத்துக் காட்டாக, கோட்டுக்கு மேலாக இருந்த பகுதி நார்மல் (Normal) வியூவிலும், கீழாக இருந்த பகுதி பிரிண்ட் லே அவுட் (Print Layout) வியூவிலும் இருந்து, கர்சர் கோட்டுக்குக் கீழாக இருந்த பகுதியில் வைக்கப்பட்டு, பிரிக்கப்பட்ட விண்டோ ஒன்றாக மாற்றி அமைக்கப்பட்டால், கிடைக்கும் விண்டோ, பிரிண்ட் லே அவுட் வியூவில் இருக்கும். கோட்டுக்கு மேலாக இருந்தால், நார்மல் வியூவில் இருக்கும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes