போட்டோக்களைக் காப்பாற்ற புதிய தளம்


மொபைல் போன் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இந்நாட்களில், நாம் அதிகமான எண்ணிக்கையில் போட்டோக்களை எடுத்து, அவற்றைக் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கிறோம். 

இதனால், ஹார்ட் டிஸ்க் இடம் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், இந்த ஹார்ட் டிஸ்க் திடீரென இயங்காமல் போனால், இந்த போட்டோக்கள் கிடைக்காது. 

இதற்கான ஒரு தீர்வாக, பல இணைய தளங்கள், க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில், இவற்றைப் பதிந்து வைத்துப் பயன்படுத்திட டிஸ்க் இடம் தருகின்றன. அந்த வகையில் அண்மையில் பார்த்த ஓர் இணைய தளம் picturelife. இதன் முகவரிhttps://picturelife.com/ இந்த தளத்தில் நம் போட்டோக்களைப் பத்திரமாக பதிந்து வைக்கலாம்.

இந்த தளத்தில் நுழைந்து, நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் மின் அஞ்சல் முகவரியினையும், அதற்கான பாஸ்வேர்டையும் கொடுத்து அக்கவுண்ட் தொடங்கவும். அடுத்து Continue மற்றும் Next Step பட்டன்களைக் கிளிக் செய்திடவும். 

உடனே, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள போட்டோக்களை பேக் அப் செய்திடும் வேலைக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். Start Backing Up Your Photographs என்ற பட்டனை நீங்கள் கிளிக் செய்தவுடன், ஒரு செட் அப் பைல் டவுண்லோட் ஆகும். இதனை இயக்கி, படங்களை ஒருங்கிணைக்கும் Picturelife Sync அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திட வேண்டும். 

இது செயல்படத் தொடங்கியவுடன், உங்கள் அக்கவுண்ட்டில் நுழைந்து, நீங்கள் ஏற்கனவே கொடுத்த தகவல்களை, உறுதி செய்வதற்காகக் கொடுத்து, எந்த பதிப்பினை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதனையும் தேர்ந்தெடுக்க வேண்டும். 

இந்த தளம் இலவசமாக 5 ஜிபி வரையிலான பைல் சேவ் செய்திட இடம் தருகிறது. இந்த இடத்தைப் பயன்படுத்தி, ஏறத்தாழ 2,000 போட்டோக்களை சேவ் செய்து வைத்திடலாம். 

எந்த பதிப்பு எனத் தேர்ந்தெடுத்தவுடன், உங்கள் கம்ப்யூட்டரில் போட்டோக்கள் மற்றும் படங்கள் உள்ள போல்டரைக் குறிப்பிட்டுக் காட்டிவிட்டால், அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு பிக்சர் லைப் தளத்தில் சேவ் செய்யப்படும். 

அனைத்தும் முடிந்த பின்னரும், நீங்கள் பிக்சர் லைப் தளம் சென்று, உங்கள் போட்டோக்களை ஆல்பங்களாகப் பிரிக்கலாம். நீங்களாகவே, போட்டோக்களை இதன் பின்னர் அப்லோட் செய்திடலாம். 

இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இந்த தளம் தனியே இதற்கென சப்போர்ட் பக்கம் ஒன்றை இயக்குகிறது. 

பல நூறு, ஏன் ஆயிரக்கணக்கான நம் போட்டோக்களைப் பத்திரமாகப் பதிந்து வைத்து, நம் வாழ்நாளின் பிற்காலத்திலும், நம் சந்ததியினரும் பார்த்து ரசிப்பது, வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். எனவே, இதுவரை இது போன்ற தளம் எதனையும் பயன்படுத்தாதவர்களும், பிறவற்றைப் பயன்படுத்தி வருபவர்களும் இதனைப் பார்க்கலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes