சாம்சங் கேலக்ஸி டேப் 2 311 க்கான முன்பதிவு


தன் சாம்சங் கேலக்ஸில் டேப் 2 311க்கான (GTP3110), இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தொடங்கியுள்ளது. 

இதன் முந்தைய பதிப்பான, டேப் 2 310 விற்குக் கூடுதலாக வைபி வசதியுடன் இந்த டேப் தரப்பட்டுள்ளது. 

இதில் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.1 தரப்பட்டுள்ளது. ரூ. 13,990 செலுத்தி, சாம்சங் இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

இதில் 3ஜி வசதி இல்லை. மற்றபடி 7 அங்குல டச் ஸ்கிரீன் டி.எப்.டி. எல்.சி.டி. திரை, 1 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர், ஒரே போகஸ் கொண்ட, வீடியோ பதிவு வசதியுடன் 3 எம்பி திறன் கொண்ட கேமரா, முன்பக்கமாக விஜிஏ கேமரா தரப்பட்டுள்ளன.

1 ஜிபி ராம் மெமரி, உள் நினைவகம் 16 எம்.பி., மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் ஆகியவை வழங்கப்படுகின்றன. வை-பி டைரக்ட், புளுடூத் 3.0., ஏஜிபிஎஸ் ஆகிய வசதிகளும் உள்ளன. 

இதன் லித்தியம் அயன் பேட்டரி 4,000mAh திறன் கொண்டது. ஏழு மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து பயன்படுத்தலாம். 

இதன் பரிமாணம் 193.7´122.3´10.5 மிமீ. எடை 344 கிராம். பார் டைப் வடிவில் வடிவமைக்கப்படுகிறது. ஜி.பி.ஆர்.எஸ். தரப்பட்டுள்ளது. 

இமெயிலுடன் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதிகள் கிடைக்கின்றன. 

இது வெள்ளை மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கிறது. பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு, எதிர்பாராத மகிழ்ச்சி அளிக்கும் பரிசு ஒன்றைத் தருவதாக, சாம்சங் அறிவித்துள்ளது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes