குறைந்த விலையில் ஸ்பைஸ் எம்5365


இரண்டு சிம் இயக்கத்தில், இரண்டு அலைவரிசையில் இயங்கும் வகையில், ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் தன் எம் 5365 என்ற மாடல் மொபைல் போனைக் கொண்டு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.1,800. 

இதன் பரிமாணம் 118x53x15 மிமீ. எடை 101 கிராம். இது பார் டைப் போன். கருப்பு கலரில் மட்டும் கிடைக்கிறது. டி.எப்.டி. வண்ணத் திரை உள்ளது. 

லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் கிடைக்கிறது. 

A2DP இணைந்த புளுடூத் மற்றும் எச்.எஸ்.பி., எச்.எப்.பி ஆகியவை தரப்பட்டுள்ளன. யு.எஸ்.பி. போர்ட் கிடைக்கிறது. 

1.3 எம்பி திறன் கொண்ட கேமரா உள்ளது. டிஜிட்டல் ஸூம் வசதியுடன் இந்த கேமரா, வீடியோ காட்சிகளையும் தருகிறது. 

எப்.எம். ரேடியோ கிடைக்கிறது. எம்பி3, எம்பி 4 பிளேயர், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ். வசதிகள் உள்ளன. 

எல்.இ.டி. டார்ச் லைட் இணைக்கப்பட்டுள்ளது. 1800 mAh திறனுடன் கூடிய லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. 

ஒருமுறை சார்ஜ் செய்தால், 650 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து 8 மணி நேரம் பேசிடலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes