பிரசன்டேஷன் பைல்களை ஒரே வகையில் திறக்க

நீங்கள், அல்லது உங்கள் சக நண்பர்கள், அடிக்கடி பிரசன்டேஷன் பைல்களைப் பயன்படுத்துகிறீர்களா? ஒரே பைலை பலர் பயன்படுத்துகையில், ஒவ்வொருவரும் ஒரு வகையில் பைலை மூடுவார்கள்.

எடுத்துக் காட்டாக, ஒருவர் Notes பயன்படுத்தும் வகையில் மூடி இருப்பார். சிலர் அவுட்லைன் வகையில் பயன்படுத்தி முடித்திருப்பார்.

வேறு சிலரோ, ஸ்லைடுகளில் தம்ப்நெய்ல் பார்த்தவாறு மூடி இருப்பார்கள். நீங்கள் திறக்கும்போது, அல்லது யார் திறந்தாலும், இறுதியாக எந்த வகையில் மூடப்பட்டதோ, அந்த வகையிலேயே, அந்த பைல் திறக்கப் படும்.

இதற்கு மாறாக, ஒரே வகையில் அனைத்து (PowerPoint 2010) பிரசன்டேஷன் பைல்களையும் திறக்கும் வகையில் அமைக்கலாம். கீழ்க்காணும் வழிகளில் இதனை செட் செய்திடவும்.

1. ரிப்பனில் “File” டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

2. இப்போது Microsoft Office Backstage வியூ தோன்றும்.

3. இதில் “Options” பட்டனில் கிளிக் செய்திடவும். இந்த வழிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, பிரசன்டேஷன் திறந்து,பின்னர் Alt + T +O என்ற கீகளை அழுத்தலாம்.

4. இங்கு “Display” என்பதன் கீழாக, “Open all documents using this view” என்பதன் அருகே உள்ள கீழ்விரி
அம்புக் குறியை அழுத்தவும். இங்கு பைல்கள் எந்த வகையில் திறக்கப்பட வேண்டும் என்பதற்குப் பல ஆப்ஷன்கள் கீழ்க்கண்டவாறு காட்டப்படும்.

* The view saved in the file (default)

* Normal - outline, notes and slides

* Normal - thumbnails, notes and slide

* Normal - outline and slide

* Normal - thumbnails and slide

* Normal - notes and slide

* Normal - slide only

* Outline Only

* Slide Sorter

* Notes

இவற்றிலிருந்து நீங்கள் விரும்பும் வகையைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ஓகே கிளிக் செய்து முடிக்கலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes