உங்கள் பாஸ்வேர்டை நினைவில் கொள்ள புதிய மென்பொருள் அறிமுகம்

இன்றைய உலகில் மின்னஞ்சலை(இ-மெயில்) பயன்படுத்தாக நபர்கள் யாரும் இல்லை எனலாம். ஒவ்வொரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். எனவே ஒவ்வொரு கணக்கிருக்கும் வெவ்வேறான பாஸ்வேர்ட் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்து கொள்வது என்பது இயலாத காரியம்.

இச்சூழ்நிலையில் உங்களது பாஸ்வேர்ட்டை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள்(சாஃப்ட்வேர்) உதவி புரிகிறது.

இந்த சாப்ட்வேர்ரில் உங்களின் அனைத்து பாஸ்வேர்ட் ஐயும் சேமித்து அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து கொள்ளலாம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும்.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்: எந்தவொரு நபரும் உங்களது பாஸ்வேர்ட்டை திருடாத படி கடினமான பாஸ்வேர்ட் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம்.

குறிப்பிட்ட ஒரு கோப்பை ஒட்டுமொத்த பாஸ்வேர்ட் ஆக தெரிவு செய்யும் வசதி. மின்னஞ்சல், இயங்குதளம் மற்றும் இணையம் என அனைத்திற்கும் தனித்தனியான பாஸ்வேர்ட்டை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி. போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் கணணியில் நிறுவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை மற்றும் ஏராளமான வசதிகள் உள்ளது.

இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தால் வரும் ZIP கோப்பை Extract செய்து Key pass என்ற கோப்பை ஓபன் செய்யுங்கள்.அதன் பின் தோன்றும் விண்டோவில் அதில் உள்ள New என்ற பட்டனை அழுத்தவும்.

அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்களின் Master pass word தெரிவு செய்து கொள்ளுங்கள் அதன்பின் தோன்றும் விண்டோவில் உங்களின் pass word வகையை தெரிவு செய்து கொண்டு Add Entry என்ற பட்டனை அழுத்தி உங்கள் pass word சேமித்து கொள்ளலாம்.

இதே முறையில் உங்களையுடைய அனைத்து பாஸ்வேர்ட்களையும் இந்த மென்பொருளில் சேமித்து கொள்ளுங்கள். மேலும் இந்த மென்பொருள் மூலம் மிக கடினமான பாஸ்வேர்ட் களை உருவாக்கலாம்.

இதற்கு Tools - pass word generate சென்று கடினமான பாஸ்வேர்ட்களை உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் உருவாகும் பாஸ்வேர்ட் தானாகவே இந்த மென்பொருளில் சேமிக்கப்படும்.


1 comments :

Subair AH at April 17, 2012 at 9:07 AM said...

There is no Link in this document

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes