எம்.எஸ் ஆபீஸ் ட்யூனிங்

உங்கள் விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் எளிதாகவும் விரைவாகவும் இயங்கிக் கொண்டிருக் கலாம். ஆனால், அதில் இயங்கும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பினால், பிரச்னைகள் ஏற்பட்டு, விண்டோஸ் இயத்தின் வேகத்தினை மட்டுப்படுத்தலாம்.

அது போன்ற பிரச்னைகள் வராமல் இருக்க பல வழிகள் உள்ளன. இங்கு சில காட்டப் பட்டுள்ளன. வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் தொகுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு டிப்ஸ் தரப்படுகிறது.


1. வேர்டின் மாறா எழுத்துருவை மாற்றுக:

கலிப்ரி (Calibri) என்ற எழுத்துவகை 11 என்ற அளவில் மாறா நிலையில் உள்ளதா? நார்மல் டெம்ப்ளேட்டினை மாற்றுவதன் மூலம் இதனை மாற்றலாம். Home டேப்பில், Styles என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

Normal என்னும் பாக்ஸில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Modify என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் டயலாக் பாக்ஸ் மூலம் விருப்பப்படும் எழுத்துருவினையும், அதற்கான பார்மட்டிங் கூறுகளையும் தேர்ந்தெடுக்கவும்.

இதன் பின்னர் New Documents based on this Template என்று இருப்பதில் கிளிக் செய்து பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இதனால் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சில பிரச்னைகளைச் சந்திப்பது தீர்க்கப்படும்.


2.எக்ஸெல்-ஆட்டோமேடிக் கால்குலேஷன் நிறுத்துக:

உங்களுடைய ஒர்க்புக் மிகவும் அதிகமான பார்முலாக்கள், கணக்கீடுகள் நிறைந்தனவாக உள்ளதா? ஒரு எண்ணை மாற்றினால், எக்ஸெல் தானாகவே நூற்றுக்கணக்கான கணக்குகளில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா?

அப்படியானால், தானாகக் கணக்கிடும் செயல்முறையினை நிறுத்தி வைக்கலாமே! இதற்கு Options டயலாக் பாக்ஸ் செல்ல வேண்டும். இதற்கு File டேப் சென்று, பின்னர், இடது பிரிவில் Options தேர்ந்தெடுக்கவும். இந்த டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன், அதன் இடது பிரிவில் Formulas தேர்ந்தெடுக்கவும்.

ஒர்க்புக் கால்குலேஷன்களுக்கு Manual என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் பைலை சேவ் செய்யாத வரையில் அல்லது எப்9 அழுத்தாத வரை இந்த எண்கள் சரியாக இருக்காது.


3. பவர்பாய்ண்ட் ஏன் திறக்கப்படவில்லை?

நீங்கள் பாடுபட்டு தயாரித்த பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் பைலை, ஒரு பிளாஷ் ட்ரைவில் பதிவு செய்து, இன்னொரு இடத்தில், மற்றொரு கம்ப்யூட்டரில் மாற்றி, டபுள் கிளிக் செய்து இயக்குகிறீர்கள். அது இயங்க மறுக்கிறது. ஏன்? பல காரணங்கள் இருக்கலாம்.

முதலாவதாக, நீங்கள் தயாரித்த பிரசன்டேஷன் பைல் .pptx என்ற வகையில் இருக்கலாம். ஆனால், நீங்கள் அதனைத் திறக்க முயற்சிப்பதோ, ஆபீஸ் தொகுப்பின் பழைய பதிப்பாக இருக்கலாம். இது போன்ற பிரச்னையைத் தவிர்க்க, உங்கள் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பைலை பழைய ஆபீஸ் பார்மட்டிலேயே (.ppt) சேவ் செய்து வைக்கலாம். புதிய ஆபீஸ் தொகுப்பு களில், (ஆபீஸ் 2007, 2010) இதற்கான வசதி உள்ளது.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at February 3, 2012 at 11:24 PM said...

பயனுள்ள பதிவு ! நன்றி சார் !

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes