இணைய வழி எஸ்.எம்.எஸ். என்னவாகும்?

நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்.கள் மட்டுமே ஒருவர் அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டினை ட்ராய் TRAI (Telecom regulatory Authority of India) அமைப்பு விதியாகக் கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளது. இது பலருக்கு நிம்மதியைத் தந்துள்ளது.

இதனால் இலவச எஸ்.எம்.எஸ். அனுப்பும் சேவையினை வழங்கி வரும் வே2எஸ்.எம்.எஸ். போன்ற தளங்களின் பணி என்னவாகும்? இந்த சந்தேகத்துடன் அந்த தளத்தினை அணுகுகையில் சில தகவல்கள் கிடைத்தன.

இந்தத் தடை விற்பனையாளர்களுக்கு பெரிய அளவில் இழப்பினைத் தந்துள்ளது. குறைந்த செலவில், அல்லது செலவே இல்லாமல் மேற்கொண்டு வந்த விளம்பரங்களுக்கு இனி வழி இல்லை.

தங்கள் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பு கொள்ள கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் இதனைப் பயன்படுத்தி வந்தனர். இந்த தடையால் அவர்கள் தங்கள் வழிமுறைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டியதுள்ளது.

இருப்பினும் இந்த தடை தேவைதான். பலருக்கு இதனால் நிம்மதி கிடைத்துள்ளது. வேலைகளுக்கிடையே இத்தகைய விளம்பரக் குறுஞ்செய்தி வருவதும், அதனை என்னவென்று பார்த்து எரிச்சலடைவதும், தலைவலியாய் இருந்து வந்தது. இனி இந்தத் தொல்லை இல்லை.

இருப்பினும் அதிக எண்ணிக்கையில் எஸ்.எம்.எஸ். அனுப்பப் பல வழிகள் கிடைக்கத்தான் செய்கின்றன. இலவச அல்லது நாள் ஒன்றுக்கு நூறு என்ற வரையறையுடன் எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியினைத் தரும் சிம் கார்டுகளை ஒன்றுக்கு இரண்டாக வாங்கி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.

இரண்டாவது வழி இன்னும் சிறப்பானது. இலவச எஸ்.எம்.எஸ்.களை வாங்கி அனுப்பும் இணையதளங்கள் இந்த வகையில் உதவிக்கு வருகின்றன. way2SMS.com, 160by2.com, fullonsms. com and whozzat.com ஆகிய தளங்கள் இத்தகைய சேவைகளைச் சிறப்பாக வழங்கி வருகின்றன. ஆனால், இவை தொல்லை தராத செய்திகளை மட்டுமே அனுமதிக்கின்றன.

இவற்றில் 160by2 இணைய தளம் மொபைல் போன் வழியாக தளத்தைப் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களையும் தருகிறது. இந்திய சோஷியல் இணைய தளமான SMSGupsup, மொத்தமாக நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியைத் தருகிறது.

இவற்றின் மூலம் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் குறுஞ்செய்திகளை அனுப்பலாம் என்றாலும், இந்த தளங்களும் வணிக ரீதியில் அனுப்பப்படும் செய்திகளைத் தடை செய்வதால், சரியான காரணங்களுக்கு மட்டுமே இந்த வசதியினைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்படுகிறது.


1 comments :

aotspr at October 12, 2011 at 2:31 PM said...

மிகவும் நல்ல பயன்னுள்ள தகவல்!....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes