கூகுளில் புதிது என்ன ?

சாப்ட்வேர், ப்ளக் இன், பிரவுசர், அப்டேட், இன்னும் என்னனென்னவோ கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கான சாதனங்களை, அவ்வப்போது கூகுள் தந்து கொண்டிருக்கிறது. புதிதாக என்ன தந்து கொண்டிருக்கிறது என்று அறிய, நாம் பல பிரிவுகளுக்குச் சென்று தேட வேண்டியதில்லை.

கூகுள் தன் தளத்தில் இதற்கென Google New என்று ஒரு லிங்க் தந்துள்ளது. இதில் கிளிக் செய்தால்,http:/www.google.com/newproducts/ என்ற முகவரியில் உள்ள தளம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்படுகிறோம். இங்கு கூகுள் தந்துள்ள பல புதிய வசதிகளைக் காணலாம்.

இவை கூகுள் அண்மையில் தந்துள்ள கூகுள் இண்ஸ்டன்ட் என்னும் பெரிய விஷயமாகவும் இருக்கலாம். அல்லது பழைய வசதிகளுக்கான அப்டேட் ப்ளக் இன்களாகவும் இருக்கலாம். இதில் பல நமக்குத் தெரியாத வசதிகளாகவும் இருக்கலாம்.

வரிசையாகக் கட்டங்களில், ஒரு நாளுக்கு முன், இரண்டு நாட்களுக்கு முன் என கூகுள் தந்த புதிய வசதிகள் கட்டம் கட்டப்பட்டு தரப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளையும் காண ஒரு கீழ்விரி மெனு ஒன்று பட்டியலாகத் தரப்பட்டுள்ளது. மேலும் நமக்கு ஆர்வம் உள்ள பிரிவுகளுக்கு எனவும் ஒரு கட்டம் தரப்பட்டுள்ளது.

இதில் வர்த்தகம், கல்வி, பொழுது போக்கு எனப் பல பிரிவுகள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாகவும் நாம் தேடிப் பார்க்கலாம். இப்படியே பல பக்கங்கள் தரப்பட்டுள்ளன.

ஆனால், இந்த தளத்தின் சிறப்பு, புதிய விஷயங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதுதான். கிட்டத்தட்ட, இது கூகுள் அக்கவுண்ட்ஸ் பக்கம் போலத்தான். இங்கு சென்றால், உங்களின் இமெயில் அக்கவுண்ட்டில் என்ன என்ன வசதிகளை ஏற்படுத்திக் கொண்டீர்களோ, அவை அனைத்தும் பட்டியலிடப்பட்டுக் கிடைக்கும்.

இருப்பினும் கூகுள் தந்துள்ள சில புதிய வசதிகள் சிலவற்றை இங்கு காண்போம். கூகுள் மிக புத்திசாலித்தனமாக ஒரு தளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் முகவரி Google Image Labeler (http://images.google.com/imagelabeler/) இங்கு சென்றால், கேம்ஸ் போல ஒரு செயல்பாடு கிடைக்கிறது.

உங்களுக்கு ஒரு கூட்டாளியை கூகுள் கண்டறிந்து தரும்.அவருடன் இமேஜ்களுக்கு பெயர் சூட்டும் விளையாட்டினை விளையாட வேண்டும். கூகுள் தேடுதளம் கண்டறியும் இமேஜ்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும்.உடன் உங்கள் கூட்டாளி அதனை ஏற்க வேண்டும்.

ஏற்றுக் கொண்டால், உங்களுக்கு பாய்ண்ட். இப்படியே தொடர்ந்து விளையாடலாம். கூகுள் தளத்திற்கு, அதன் இமேஜ்களுக்குப் பெயர் கிடைக்கிறது. அதே நேரத்தில், இதற்கென எந்த செலவும் அதற்கு ஏற்படப் போவதில்லை. இதில் நிறையப் பேர் உற்சாகத்துடன் கலந்துகொள்கின்றனர். அடுத்ததாக கூகுள் பேக் மேன். பேக்மேன் என்ற பிரபலமான கேம்ஸ் (Pacman )அறிமுகப்படுத்தப்பட்டு, 30 ஆண்டுகள் ஆனதற்காக, சென்ற மே மாதம், கூகுள் தன் தளத்தில் இந்த விளையாட்டினை அளித்தது.

லட்சக்கணக்கான பேர், தங்களின் வேலைக்கு இடையே இதில் விளையாடி மகிழ்ந்தனர். சிலர் தங்களின் வேலையில் கவனம் செலுத்தாமல், விளையாண்டு கொண்டே இருந்தனர். பின்னர், சில நாட்கள் கழித்து, இந்த கேம் நீக்கப்பட்டது.

ஆனால் இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இதனைத் தனித் தளத்தில் தந்துள்ளது கூகுள். அதன் முகவரிhttp://www.google.com/pacman/. இந்த தளம் சென்றால், இந்த கேம் விளையாடி மகிழலாம். இந்த கேம் கீழாக, கூகுள் தேடுதளமும் கிடைக்கிறது.

அடுத்து கூகுள் லேப்ஸ் (GoogleLabs) என்ற தளத்தைக் கூறலாம். இங்கு கூகுள் தளத்தின் புதிய இலக்குகள், தொழில் நுட்பம், அதன் சோதனைச் சாலையிலிருந்து புதியதாக என்ன வந்துள்ளது என்று அறியலாம். இதன் தளம் http:/www.googlelabs.com. இதுவே நமக்கு கூகுள் தரும் புதிய வசதிகளுக்கான நுழைவு வாயிலாகவும் அமைகிறது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes