கூகுளின் அடுத்தகட்ட அசத்தல் முயற்சி

உலகம் முழுவதும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. இதற்கு காரணம் டிரைவர்களின் கவனக்குறைவும், முன்னால் செல்லும் வாகனத்தை அதிவேகமாய் சென்று முந்துவதும் தான்.

நம் நாட்டைப் பொறுத்த வரையில் டிரைவர்கள் பலர் இரவு நேரங்களில் லேசாக கண் அயர்வதால் விபத்தில் சிக்கி உயிரை பறி கொடுக்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம் சாலையில் தானாகவே ஓடும் ரோபாட்டிக் ரக கார்களை உருவாக்கி உள்ளது.

இந்த கார்களில் செயற்கையான இன்டலி ஜென்ஸ் சாப்ட்வேர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கார் அருகிலோ, எதிரிலோ கார் வந்தால் அதை அறிந்து சட்டென விலகி சென்று விடும். எக் காரணத்தை கொண்டும் அருகில் உள்ள கார்களில் உரசாது.

கார் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது ரோட்டில் சிவப்பு விளக்கு சிக்னல் போடப்பட்டால், அடுத்த கணமே வேகத்தை குறைத்து தானாக இந்த கார்கள் நின்று விடுகிறது. இக்காரில் உள்ள “ரோபாட்” டிரைவர்கள்-மனிதர்களை விட மிக நன்றாக கார்களை இயக்குகின்றன.

இந்த ரோபாட்களுக்கு தூக்கம், மயக்கம், சோர்வு என்பது வரவே வராது. தானாக இயங்கும் இந்த கார்கள் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டுள்ளன. எரிபொருளை குறைவாக பயன்படுத்தும் என்ஜின்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. எளிதில் எந்தவித வைரசும் இதில் தொற்றாது.

சமீபத்தில் இந்த வகை ரோபாட் கார்களை கூகுள் நிறுவனம் சான்பிரஸ்சிஸ் நகரில் உள்ள சாலைகளில் இயக்கி சோதனை செய்தது. அப்போது போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைகளிலும் இந்த கார்கள் வேகமாக சென்று பிரமிக்கச் செய்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதால் அதை உருவாக்கிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த கார்களில் எந்ததெந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பது பற்றி இதில் உள்ள சாப்ட்வேரில் பதிவு செய்து கொள்ளலாம். இதனால் குறிப்பிட்ட சாலைகளில் இவை சரியான வேகத்தில் செல்கிறது. இந்த கார்கள் மலைப் பாதைகளிலும் மிகவும் சரியாக இயங்குகிறது. இதையும் விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்த்து விட்டனர்.

ரோட்டோரத்தில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து அடையாள குறியீடுகளை இந்த காரில் உள்ள “சென்சார்” கருவிகள் கவனித்து ஒழுங்கான முறையில் இயங்கச் செய்கிறது. இதை உருவாக்கி உள்ள பிரபல “ரோபாட்டிக்” விஞ்ஞானி கிறிஸ்டோபர் உர்ம்கர் கூறும் போது, “இந்த ரோபாட்டிக் ரக கார்கள் அடுத்த தலைமுறையில் மிகவும் பிரபலமாகி விடும். அனைத்து நாடுகளிலும் ரோபாட் கார்கள் தான் அதிக அளவில் பயன்படுத்தப்படும்.


இக் கார்களில் பயணம் செய்பவர்கள் எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று முன்கூட்டியே பதிவு செய்து விட்டால் அந்த இடத்திற்கு சென்றதும் நின்று விடும். இக் கார்களில் செல்லும் போது பக்கத்தில் எந்த வாகனத்துடனும் மோதி விடுமோ என்று பயப்பட தேவையில்லை.


காரில் உள்ள சென்சார் கருவி மற்ற வாகனம் நெருங்கி வருவதை அறிந்து “டக்” கென விலகி விடும். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்த வகை கார்களை சோதனை ஓட்டம் நடத்தி பார்த்துள்ளோம். முழு வெற்றி கிடைத்துள்ளது” என்றார். தானாக இயங்கும் இந்த ரோபாட்டிக் கார்களை நம் நாட்டில் இயக்கினால் பெருமளவு விபத்துக்கள் குறைவது உறுதி.


4 comments :

Aba at October 13, 2010 at 9:27 PM said...

நல்ல தகவல்.. எப்ப ரிலீஸாம்?

மீ. குமார் at October 13, 2010 at 10:28 PM said...

உன்மையில் மிக பயனுள்ள தகவல், இந்த கார் நமது தேசத்திற்கு ஒத்து வருமா?

sinmajan at October 13, 2010 at 10:28 PM said...

இந்த வீடியோ பார்த்தீர்களா..?அந்தக் காரின் close up காட்சிகள் உண்டு http://vimeo.com/15794007

Ravi kumar Karunanithi at October 14, 2010 at 8:51 AM said...

நல்ல தகவல்.. thanks

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes