இணைய தளத்தின் ஐ.பி.முகவரி

ஒரு கம்ப்யூட்டர் மற்றொரு கம்யூட்டருடன் தொடர்பு கொண்டு தகவல் பரிமாற அந்தக் கம்ப்யூட்டரின் ஐ.பி. முகவரி தெரிந்திருக்க வேண்டும். இந்த ஐபி முகவரியானது எண்களால் ஆனது. 32 பிட் கொண்ட ஐபி முகவரியை எட்டு எட்டு பிட்டுகளாகப் பிரிப்பார்கள்.

ஒவ்வொரு 8 பிட்டையும் Actet என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். ஆக்டெட்டின் மதிப்பு 0 முதல் 255க்குள் ஒரு எண்ணாக இருக்கும். எடுத்துக் காட்டாகக் கூற வேண்டுமானால் 167.213.40.158 என்பது ஒரு ஐபி முகவரி. இதில் நான்கு பகுதிகள் உள்ளன.

ஒரு பகுதியும் அடுத்த பகுதியும் முற்றுப் புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு பகுதி என்பது ஒரு ஆக்டெட் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

எண்ணா? பெயரா?

உங்கள் நண்பர்களுக்குள் 23456789 என்ற தொலைபேசியை வைத்திருப்பது யார் என்று கேட்டால் சற்று நேரம் விழிப்பீர்கள். அதே நேரத்தில் நண்பர் ராமசாமியைத் தெரியுமா என்று கேட்டால் உடனே அவரை நினைவிற்குக் கொண்டு வந்து விடுவீர்கள். இதற்குக் காரணம் எண்களை நினைவில் வைப்பதைக் காட்டிலும் பெயரை நினைவில் வைப்பது எளிது. இது மனித இயல்பு.

இன்டர்நெட் மூலமாக ஏராளமான கம்ப்யூட்டர்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு உள்ளது. ஒவ்வொரு கம்ப்யூட்டரின் ஐபி முகவரியையும் அதன் எண்களில் நினைவில் வைத்திருப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகும்.

ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் டொமைன் நேம் என்ற பெயரால் ஆன முகவரியைக் கொடுக்கலாம் என கம்ப்யூட்டர் அறிஞர்கள் ஒரு கட்டத்தில் முடிவெடுத்து செயல் படுத்தினர். எடுத்துக் காட்டாக www.yahoo.com என்பது யாஹூ இணைய தளத்தின் பெயராகும். இதனை நினைவில் கொள்வதும் எளிது. இன்டர்நெட்டில் இணைந்துள்ள ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஐபி முகவரி உண்டு; பெரும்பாலான கம்ப்யூட்டர்களுக்கு குறிப்பாக சர்வர்களுக்கு டொமைன் பெயர்களும் உண்டு.


டொமைன் நேம் சிஸ்டம்:

நீங்கள் ஒரு கம்ப்யூட்டருடன் தொடர்பு கொள்ள விரும்பினால் அதன் ஐபி முகவரியைப் பயன்படுத்தலாம்; அல்லது அதன் டொமைன் பெயரைப் பயன்படுத்தலாம். ஆனால் கம்ப்யூட்டர்களுக்குத் தேவையானது ஐபி முகவரிகள் மட்டுமே. நமது வசதிக்காக நாம் டொமைன் பெயர்களைப் பயன்படுத்துகிறோம்.

இந்த டொமைன் பெயர்களுக்கான ஐபி முகவரி என்ன என்பதனை முதலில் உங்கள் கம்ப்யூட்டர் கண்டு பிடித்து பின்பு அந்த ஐபி முகவரியைப் பயன்படுத்திக் கொள்கிறது. நீங்கள் தொடர்பு கொள்ள விரும்புகிற கம்ப்யூட்டரின் ஐபி முகவரி 123.45.67.89 என வைத்துக் கொள்வோம். அந்த கம்ப்யூட்டருக்கான டொமைன் பெயர் www.abc.com எனவும் வைத்துக் கொள்ளலாம்.

இன்டர்நெட்டில் நுழைந்தவுடன் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரின் பிரவுசர் சாப்ட்வேரைத் திறந்து அதன் முகவரிப் பகுதியில் 123. 45.67.89 என டைப் செய்த உடனேயே அந்தக் கம்ப்யூட்டரில் நுழைந்து விடுவீர்கள். காரணம் நீங்கள் ஐபி முகவரியைப் பயன்படுத்தி யுள்ளீர்கள். கம்ப்யூட்டருக்கு ஐபி முகவரியை நேராகக் கையாளத் தெரியும்.

ஐ பி முகவரிக்குப் பதிலாக அந்தக் கம்ப்யூட்டரின் டொமைன் பெயரான www.abc.com என்பதை டைப் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுவோம். கம்ப்யூட்டருக்குத் தேவை ஐபி முகவரி தான். டொமைன் பெயர் அல்ல. எனவே உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் டை ப் செய்துள்ள www.abc.com என்ற டொமைன் பெயரைக் கொண்ட தளத்தின் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க முயலும்.

இதற்கான Domain Name Server – DNS என்ற சர்வரைத் தொடர்பு கொள்ளும். அந்த டொமைன் பெயருக்கு உரித்தான ஐபி முகவரியை டி.என்.எஸ். சர்வர் கண்டு பிடித்து உங்கள் கம்ப்யூட்டருக்கு வழங்கும். அந்த ஐபி முகவரியைப் பயன்படுத்தி உங்கள் கம்ப்யூட்டர் அந்த கம்ப்யூட்டருடன் தொடர்பு கொள்ளும்.

பிரவுசரில் நேரடியாக எண்களால் ஆன ஐபி முகவரியை டைப் செய்தால் உடனடியாக உங்கள் கம்ப்யூட்டர் அந்த எண்ணுக்கான கம்ப்யூட்டரைத் தொடர்பு கொண்டு இணைப்பை ஏற்படுத்தும். ஏதோ காரணத்தால் டொமைன் நேம் சர்வர் இயங்காமல் போனால், டொமைன் நேம் கொடுத்தால் உங்களுக்கு இணைப்பு கிடைக்காது. எனவே உங்களுக்கு அத்தியாவசியமாக, அடிக்கடி தொடர்பு கொண்டே ஆக வேண்டும் என்கிற இணைய சர்வர்களின் எண்களையும் எங்காவது குறித்துவைத்துக் கொள்வதும் நல்லது.


5 comments :

Unknown at October 7, 2010 at 9:54 PM said...

இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

iliyas at October 8, 2010 at 6:52 AM said...

hi,
boss next blog write about active directory

SelvamJilla at October 8, 2010 at 2:42 PM said...

Hi
I am impressed about your tamil blog. i am also having one tamil blog will give your kathal romantic tamil kavithai.

Please check http://alanselvam.blogspot.com/
-----------------
My Request:

how you setup google ad in your blog. The reason to ask this to you, like google doesn't support ads for tamil blog. i think. Please give your guide for setup ad in google.

Thanks,
M. Selvam.

SelvamJilla at October 8, 2010 at 2:44 PM said...

my id :alanselvam@gmail.com

suresh at November 9, 2010 at 5:48 PM said...

I want to rar password breaker in send to my mail i'd....

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes