கூகுள் மீது வழக்கு தொடர்ந்தது ஆரக்கிள்

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கான மென்பொருள் உருவாக்கத்தில், காப்புரிமை மீறல் தொடர்பாக பிரபல கூகுள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது ஆரக்கிள் நிறுவனம்.

கலிபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த வியாழனன்று தொடரப்பட்ட இந்த வழக்கில், 'கூகுள் நிறுவனம் வேண்டுமென்றே, மீண்டும் மீண்டும் ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா அடிப்படையிலான அறிவுசார் சொத்துரிமையை அப்பட்டமாகக் காப்பியடிக்கிறது.

இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்திடமிருந்து 5.6 பில்லியன் டாலர் கொடுத்து ஜாவா மென்பொருள் உரிமையைப் பெற்றது ஆரக்கிள். இணையதளம் சார்ந்த பல வசதிகளுக்கு ஜாவா தொழில்நுட்பம் அவசியம்.


ஆனால் கூகுள் நிறுவனம் எந்த வித காப்புரிமைத் தொகையும் தராமல் இந்த மொன்பொருள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக நீண்ட நாட்களாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளில் இப்போது ஆரக்கிள் இறங்கியுள்ளது.


'டிவிடிகள், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் என பல மின்னணு சாதனங்களிலும் இன்றைக்கு ஜாவா பயன்பாடு அவசியமாகிறது. எனவே ஜாவா இன்றைக்கு முக்கிய சொத்தாகத் திகழ்கிறது. அதன் உரிமையை உரிய அனுமதியின்று யாரும் அனுபவிக்க விடமாட்டோம்' என்கிறார் ஆரக்கிள் நிறுவன சிஇஓ லாரி எல்லிசன்.


கூகுளின் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் ஜாவா தொழில்நுட்பம் மிக முக்கியமான ஒன்றாகும். நாளொன்றுக்கு உலகம் முழுக்க 2 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகின்றன.


2 comments :

calmmen at August 20, 2010 at 9:56 AM said...

very good news

அணில் at September 13, 2010 at 1:19 AM said...

அவர்கள் பயன்படுத்துவது ஜாவாவை ஒத்த தொழில்நுட்பம்தான். Dalvik engine. சன் மைக்ரோசிஸ்டம்ஸ் கண்டுகொள்ளாத நிலையில் அ தனை கைப்பற்றிய பின்னர் திட்டமிட்டே ஆரக்கிள் காய் நகர்த்துகின்றனர். ஜாவாவை உருவாக்கியதுதான் சன் மைக்ரோசிஸ்டம்ஸ். ஆனால் ஜாவா தொழில்நுட்பத்திற்கான மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் பங்களிப்பு அதிகம். திறமூல உலகில் பலயிடங்களில் வியாபித்திருக்கும் ஜாவாவை கட்டுப்படுத்துவது பெரிய சவால்தான். என் ஓட்டு கூகிளுக்கே.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes