விலையை உடைக்கும் பிளை மொபைல்

பிளை மொபைல் 2 சிம் மொபைல்களுக்குப் பெயர் பெற்ற ஒரு நிறுவனம். அதே போல மொபைல் போன்களின் விலையைக் குறைத்து, வசதிகளை அதிகமாகத் தருவதிலும் இதுவே முதல் இடத்தில் உள்ளது.

அண்மையில் Fly V180 DS என்ற இரண்டு சிம் போன் ஒன்றை பிளை வெளியிட்டுள்ளது. இந்திய விற்பனைப் பிரிவை நிர்வகிக்கும் பிரேம்குமார் இதனை வெளியிட்டுப் பேசுகையில், தொழில் நுட்ப ரீதியில் நவீன வசதிகளைக் குறைந்த விலையில் வழங்குவதே தங்கள் போன்களின் தாரக மந்திரம் என்றார்.

Fly V180 DS போன் ரூ. 2,539 என விலையிடப்பட்டுள்ளது. இது ஒரு டூயல் சிம் கேமரா போன். புளுடூத், வீடியோ பதிவு, ஆடியோ பிளேயர், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ நேரப்படி இயக்கும் வசதி என இந்த போன் பல வசதிகளைக் கொண்டுள்ளது.

இதன் மெமரி 250 கேபி. ஆனால் 4 ஜிபி வரை இதனை அதிகப்படுத்தலாம். 800 முகவரிகளைக் கொள்ளும் அட்ரஸ் புக் உள்ளது. ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் டெக்ஸ்ட் அமைக்கலாம். இதன் வண்ணத்திரை 1.8 அங்குல அகலம் உடையது.

குறிப்பிட்ட எண் அழைப்புகளைத் தடுப்பது, டார்ச், யு.எஸ்.பி. சார்ஜ், மாஸ் ஸ்டோரேஜ் வசதி ஆகியவையும் உள்ளன. இந்தியாவில் இயங்கும் பல மொபைல் விற்பனை நிலையங்களில் இது கிடைக்கிறது


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes