பார்வையற்றோருக்கு தனி வெப்சைட்

மத்திய சமூகநீதித்துறையின் வெப் சைட், பார்வையற்றோரும் பார்க்கும் விதத்தில் முதன்முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் சார்பிலும் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பிலும் சமூக விஷயங்கள் தொடர்பாக குறைந்தபட்சம் ஐயாயிரம் இணையதளங்கள் உள்ளன. நவீன தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இப்போது கூட இவற்றில் ஒன்றேனும், உடல் ஊனமுற்றவர்களால் பயன்படுத்த முடியாத அளவில்தான் இருக் கின்றன.


குறிப்பாக, கண்பார்வையற்றோர், நிறங்களை அடையாளம் காண இயலாதோர், மங்கலான பார்வை உடையோர் போன்றோர் இந்த இணையதளங்களைப் பார்க்க இயலாத நிலையில் தான் உள்ளன. முதன்முறையாக சமூகநீதி மற்றும் அதிகாரத்துக்கான மத்திய அமைச்சகத்தின் www.socialjustice.nic.in இணையதளம் கண்பார்வையற்றோர் போன்றவர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.


"ஊனமுற்றவர்களுக்கும் இணையதளங்களைப் பயன்படுத்தும் உரிமையுண்டு என்பதில் ஐயமில்லை' என்கிறார் இத்துறையின் அமைச்சர் முகுல் வாஸ்னிக். "ஒரு அரசு இணையதளம் முதன் முறையாக இதுபோன்று இயங்குவதற்கு எனது துறையின் இணையதளம் வழிகாட்டியாக இருக்கிறது' என்கிறார் அவர்.



படங்களுக்குப் பதில் மாற்று எழுத்து வடிவங்கள், மெதுவாகப் படிப்பவர்களின் வசதிக்காக எழுத் துக்களுக்கிடையில் போதுமான இடைவெளி, பெரிய வடிவ எழுத் துக்கள், தேவையான இணைப் புகள், வீடியோக்கள் என்பதாக அந்த இணையதளம் வடிவமைக்கப் பட்டுள்ளது.


மவுஸ் பயன்படுத்த இயலாதவர்கள் முழுக்க முழுக்க கீபோர்டை மட்டுமே பயன்படுத்தலாம். கடந்த 2008, டிசம்பர் 3ம் தேதி, தங்கள் உரிமைகளை வலியுறுத்தி டில்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இவர்களின் பிரதிநிதிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகளைச் சந்தித்து, தங்கள் குறைகளைத் தெரிவித்தனர்.


அதன் அடிப்படையில், அரசு இணையதளங்களை ஊனமுற்றோரும் பயன்படுத்தும் வகையில் சர்வதேச விதிகளின் அடிப்படையில் அமைக்கும்படி மத்திய தகவல் அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டது.


"இது நடந்து ஒரு ஆண்டுக்குப் பின், முதன்முறையாக இப்போதுதான் ஒரு அரசு இணையதளம் எங்களுக்கும் சேர்த்து உருவாகியிருக்கிறது. இணையதளங்கள் வைத்துள்ள அரசின் 50 துறைகளுக்கு எங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்திருந்தோம்.

அவர்களில் ஒருவரும் இதுவரை அதற்குப் பதில் அனுப்பியதில்லை' என்கிறார் தேசிய ஊனமுற்றோருக்கான மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் இயக்குனர் அபிதி


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes