எம்-6464 இசை போனை அறிமுகப் படுத்தியது ஸ்பைஸ் மொபைல்

செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஸ்‌பைஸ் மொபைல் நிறுவனம் , இசை பிரியர்களை கவரும் விதமாக புதிய வகை மொபைல்களை இந்தியாவில் அறிமுகப் படுத்தி உள்ளது.

இந்த மாடல்களுக்கு எம்-6464 மற்றும் எம்-6262 என்று பெயரிடப் பட்டுள்ளது.


இந்த வகை போன்களில், யமஹா ஆம்பிளிபயர் மற்றும் இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளதால் பாடல்களை இரைச்சலின்றி துல்லியமாகக் கேட்டு மகிழலாம்.


8 ஜிபி வரை நினைவகத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. டிஜிட்டல் கேமரா, பெரிய திரை, எப்.எம்., வசதி ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.


எம்பி3 பிளேயர் வசதி, பாடல்களை முன், பின்னோக்கி ஓடவிடும் வசதி உள்ளிட்டவைகளும் இதில் உள்ளன.


இதுதவிர, ஐ.பி.ஐ.பி.ஓ., வசதி, எஸ்.எம்.எஸ்., செடூலர், பிரைவஸி லாக், கால் பிளாக்லிஸ்ட் ஆப்ஷன் ஆகியவை உள்ளன.


ஸ்பைஸ் எம்-6464 மொபைலின் விலை ரூ. 5,349. ஸ்பைஸ் எம்-6262 வகை மொபைல் அடுத்த மாதம் அறிமுகப் படுத்தப் படவுள்ளது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes