நோக்கியா போன்களுக்கு இலவச மேப்

நோக்கியாவின் போன்களில் கீழ்க்காணும் போன்களில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்கிறீர்களா!(N95, E66, 6110, N82, 6210, E57, 6220, N78, N96, N73)அப்படியானால் 412க்கும் மேற்பட்ட நகரங்களுக்கான மேப்களை நீங்கள் இலவசமாக டவுண்லோட் செய்து, உங்கள் மொபைலில் வைத்து பயன்படுத்தலாம்.

சாட்நவ் டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனம் இதற்கான சாப்ட்வேர் தொகுப்பினை இலவசமாகwww.satguide.in என்ற முகவரியில் உள்ள தன் தளத்தில் வழங்குகிறது.

ஏற்கனவே விண்டோஸ் இயக்கத்தொகுப்பில் இயங்கும், எச்.டி.சி., எச்.பி., ஐமேட், அஸூஸ் மற்றும் ஏசர் ஆகிய நிறுவனங்களின் விண்டோஸ் தொகுப்பில் இயங்கும் போன்களுடன் இந்த சாப்ட்வேர் இலவசமாகத் தரப்படுகிறது.

நோக்கியாவைப் பயன்படுத்துபவர்கள் இந்த மேப்பினை இலவசமாக டவுண்லோட் செய்து 10 முறை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பின் மீண்டும் இந்த சாப்ட்வேர் தொகுப்பை இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

அல்லது மொத்தமாக ரூ.2,138 செலுத்தி வாழ்நாள் முழுவதும் வேறு எந்தக் கட்டணமும் செலுத்தாமல், தொடர்ந்து பயன்படுத்தலாம். இதனை 30 நாட்களுக்குள் அப்கிரேட் செய்திட விரும்பினால், அவர்களுக்கு ரூ.1,000 சலுகை தரப்படுகிறது


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes