புதிய முயற்சியில் வெர்ஜின் மொபைல்

கிரிக்கெட் ரசிகர்களுக்காக இணைய தளம் ஒன்றை அண்மையில் வெர்ஜின் மொபைல் தொடங்கியுள்ளது.

www.indianhatkeleague.comஎன்ற இந்த தளம் மூலம் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களை ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டில் பங்கு கொள்ள வெர்ஜின் மொபைல் அழைக்கிறது. இந்த இணைய தளத்தில் நுழைந்து உங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு உடனே விளையாடத் தொடங்கலாம்.

எட்டு அணிகளை வெர்ஜின் மொபைல் உருவாக்கியுள்ளது. ஏதாவது ஒரு அணியில் பதிவு செய்து கொண்டு நீங்கள் அதற்காக விளையாடலாம். நீங்கள் எடுக்கும் ரன்கள் உங்கள் பெயரிலும் உங்கள் அணியின் பெயரிலும் சேர்க்கப்படும்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை தடவை வேண்டுமானாலும் விளையாடலாம்; ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிக்கும் தனித்தனியாக புள்ளிகள் தரப்படும். குறித்த நேரத்திற்குள் ரன்கள் தரப்படும். இந்த ஆன்லைன் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு பயிற்சியும் உண்டு.

ஒரு போட்டியில் விளையாடி தோற்றுவிட்டால் அடுத்த கட்ட போட்டிக்குத் தகுதி பெறாவிட்டாலும் அவரவர் எடுத்த புள்ளிகள் கணக்கிலேயே வைக்கப்படும். மேலும் விளையாட விரும்பினால் வேறு அணியில் சேர்ந்து விளையாடி ஏற்கனவே சேர்த்து வைத்த புள்ளிகளையும் இதனுடன் கூட்டி தகுதி பெறலாம்.

ஆன் லைன் விளையாட்டு வீரர்களைக் கவர்வதற்காக வெர்ஜின் மொபைல் இந்த போட்டிகளை நடத்துகிறது. ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்குகிறது. முடிவில் ஐ–20 ஹூண்டாய் கார் பலவகையான பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் விளையாட்டினை உங்கள் நண்பருக்குப் பரிந்துரை செய்தாலும் பரிசு உண்டு


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes