அமீரின் யோகி 27ம்தேதி ரீலிஸ்

பருத்திவீரன் படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற டைரக்டர் அமீர் நாயகனாக நடித்துள்ள படம் யோகி. சுப்பிரமணியம் சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக நடிகை மதுமிதா நடித்திருக்கிறார்.

சென்னையில் உள்ள குடிசை பகுதிதான் யோகி படத்தின் கதைக்களம். அங்கு வசிக்கும் யோகேஷ்வரன் என்கிற யோகி இளைஞனின் உணர்வுகளை ஹாலிவுட் தரத்தில் படமாக்கியிருக்கிறார்களாம்.

யோகி படம் வருகிற 27ம்தேதி ரீலிஸ் ஆகவிருக்கிறது. சென்னை மற்றும் மதுரை நகரங்களில் மட்டும் தனது டீம்வொர்க் புரொடக்ஷன் மூலம் யோகியை வெளியிடுகிறார் அமீர்.

யோகி படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை பார்த்த தமிழ் சினிமா மூத்தோர்கள் பலரும் சுப்பிரமணியம் சிவாவை வாயார வாழ்த்தியிருக்கிறார்கள்.

படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதுடன், இப்படத்தின் மூலம் சுப்பிரமணியம் சிவாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றும் பாராட்டி வருகிறார்களாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes