இவர்களும் வருங்கால இந்திய மன்னர்களே

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி தர அரசு முன்வர வேண்டும்.அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான தனியாகபள்ளிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.



மாவட்ட தலைநகர் நீங்கலாக தேவைக்கேற்ப குறிப் பிட்ட சில ஊர்களிலும் இப்பள்ளிகள் உள்ளன. தனியார் தொண்டுநிறுவனங்கள் மூலம் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கட்டுப்பாட்டில் இப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன.


6 முதல் 14வயதுக்குட்பட்ட மனவளர்ச்சி குறைவு, மூளை முடக்குவாதம், புற உலக சிந்தனையில்லாதவர்கள், காதுகேளாமை மற்றும் வாய் பேச முடியாமை ஆகிய குறைபாடுடைய குழந்தைகள் இங்கு சேர்க்கப்படுகின்றனர்.


இயங்கும் விதம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரை இப்பள்ளிகள் இயங்குகின்றன. காலை டிபன், 11 மணிக்கு டீ, மதியம் உணவு, மாலையில் டீ ஆகியவை குழந்தைகளுக்கு இலவசமாக தரப்படுகிறது.பயிற்சி முறை:



பழநியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக நடத்தப்படும் அவார்டு பள்ளியின் ஆசிரியைகள் அம்சலட்சுமி, அம்சவள்ளி கூறுகையில்,""குழந்தைகளுக்கு பேச்சு, பொம்மைகளுடன் விளையாடுதல், நடத்தல், மெகா பந்துகள் மூலம் தண்டுவடம் மற்றும் வயிற்றிற்கான பயிற்சி தரப்படுகிறது.


நேரம், வடிவம், நிறங்கள், நாணயம் அறிதல் பயிற்சியும் தரப்படுகிறது. வீட்டிற்கு இவர்கள் சென்ற பின் இரவில் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கிறோம். மாதம் ஒருமுறை பெற்றோருடன் குழந்தைகளின் நிலையை கேட்டு அதற்கு தகுந்தவகையில் பயிற்சி முறையை மாற்றி தருகிறோம்.


கடந்த ஓராண்டில் பல குழந்தைகள் இங்கு வந்ததை விட முன்னேற்றம் அடைந்து உள்ளனர்,''என்றனர். பள்ளி நிறுவனர் பெலிக்ஸ் கூறுகையில்,



"" 6 வயதுக்கு முன்னரே இதுபோன்ற குழந்தைகள் அடையாளம் காண வேண்டும். உறவுக்குள் திருமணம் தான் இதுபோன்ற குறைவுக்கு முக்கிய காரணம். பெற்றோர் மற்றும் சமூக ஒத்துழைப்பு இருந்தால் இவர்களை விரைவில் குணமாக்க முடியும்.


இவர்களுக்கு முழுமையான பயிற்சி தர அதிக உபகரணங்கள் தேவை,'' என்றார். இங்கு பயிற்சி பெறும் மாணவியின் தாய் சசிகலா கூறுகையில்,""இங்கு சேர்வதற்கு முன் என் குழந்தை உட்கார, நடக்க முடியாத நிலையில் இருந்தாள்.


ஓராண்டில் உட்கார, பேச துவங்கியுள்ளாள்,'' என்றார். அரசு உதவி: மாநில அளவில் உள்ள இப்பள்ளிகளில் கூடுதலாக உபகரணங்கள் இருந்தால் பயிற்சி பெறும் குழந்தைகள் பூரணமாக குணமடைவர். இதற்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகள் உதவி செய்ய முன்வர வேண்டும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes