ரீமேக்கிலும் முதலிடம்!

புதிய படமாக இருந்தாலும் பழைய படமாக இருந்தாலும் இன்றைய தேதியில் ரஜினியின் படங்கள்தான் ரீமேக் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன.

முதல் ரீமேக் "பில்லா'. ரஜினியின் "பில்லா'வைப் போலவே இந்த ரீமேக் "பில்லா'வும் வசூலை குவித்தது. தோல்விகளால் சுருண்டு கிடந்த அஜீத்துக்குப் புத்துணர்ச்சியாகவும் இந்தப் படம் அமைந்தது.

அடுத்து சுந்தர்.சி, சினேகா நடிக்கும் "முரட்டு காளை' ரீமேக் படத்தின் படப்பிடிப்பும் ஏறக்குறைய முடியும் தறுவாயில் உள்ளது. ரஜினியின் "மாப்பிள்ளை' ரீமேக்கில் அவரது மாப்பிள்ளை தனுஷே நடிக்கிறார். "ஜானி' படத்தின் ரீமேக் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் ஜீவன் நடிக்கிறார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து ரஜினியின் "நான் அடிமை இல்லை' படத்தை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவை தவிர ரஜினியின் அரை டஜன் ஹிட் படங்கள் ரீமேக் உரிமைக்காக காத்திருக்கிறதாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes