ரஜினி செல்லும் பாபா குகைக்கு ஒரு பயணம்

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் "நடந்தது என்ன?' நிகழ்ச்சியில் பல்வேறு புதுமையான தகவல்கள் ஆதாரப்பூர்வமாகவும் சுவாரஸ்யமாகவும் இடம்பெற்று வருகின்றன.

அதில் வரும் வாரம், இமயமலையில் உள்ள பாபா குகையைப் பற்றிய அரிய தகவல்கள் இடம்பெறுகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் சென்று வருகிறார்.

இமயமலை அவரை ஈர்த்ததன் பின்னணி பற்றியும் பாபா வாழ்ந்த குகைக்கு முறையாக பயணம் மேற்கொண்டு அதில் அடங்கியிருக்கும் பல அதிசயங்கள், ஆச்சரியங்கள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் விளக்கப்படுகின்றன.

இமயமலைக்கு ரஜினி பயணிக்கும்போது அவருடன் செல்லும் நண்பர் ஹரி, 2500 ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருப்பதாகக் கூறப்படும் பாபாஜியைப் பற்றி பல அரிய தகவல்களை நேயர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்.

ரஜினியின் இமயமலை பயணம், பாபா குகை போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெறும் இந்த நிகழ்ச்சி, வரும் திங்கள் (செப்.21) முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes