மெய்யாலுமே பொய்

சூப்பர் ஸ்டார் ஆர்ட் மூவிஸ் பட நிறுவனம் சார்பாக ஒளிப்பதிவாளர் எம்.கேசவன் தயாரிக்கும் புதிய படம் "மெய்யாலுமே பொய்'. இதில் பிரபல விளம்பர மாடல் சுபாஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ருக்மன் இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார்.

மலையாளத்திலும் தெலுங்கிலும் நடித்துள்ள நீனு கார்த்திகா இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அமெரிக்காவின் ஹாலிவுட் திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற தர்ஷா, இன்னொரு கதாநாயகியாக அறிமுகமாகிறார். மலாய் படங்களில் நடித்துள்ள மலேசியா சீனு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நெப்போலியன், கவுண்டமணி நடித்த "மாமனிதன்' படத்தை இயக்கிய குணசேகர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். படத்தைப் பற்றி கேட்டபோது...

""மறைந்த நடிகர் சார்லி சாப்ளினிடம் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது... கர்ஸ்ங் ண்ள் ற்ழ்ன்ங், க்ஷன்ற் ற்ட்ஹற் ண்ள் ப்ண்ங் என்று பதில் சொன்னார். அந்த வார்த்தைகளில் உள்ள கருத்துகளை மையமாக வைத்தே "மெய்யாலுமே பொய்' கதையை உருவாக்கியிருக்கிறேன். நேர்மையான ஹீரோவை சூழ்நிலை காரணமாக கெட்டவனாக நினைக்கும் கதாநாயகி, உண்மையிலேயே கெட்டவனாக இருக்கும் ஒருவனை நல்லவன் என நம்புகிறாள். இதையடுத்து அவளுடைய வாழ்வில் ஏற்படும் திருப்பங்களை வித்தியாசமான திரைக்கதையில் சுவாரஸ்யமாகச் சொல்லுகிறோம்'' என்றார் இயக்குநர்.

இசை -அமிகோ சுகு. பாடல்கள் -பழனிபாரதி, நா.முத்துக்குமார், சினேகன், ஏக்நாத், மா.அன்பழகன். ஒளிப்பதிவு -எம்.கே.குட்டி.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes