விஷப் பாம்பு கடித்தால் அறிகுறிகள் என்ன?

நல்லபாம்பு மற்றும் கட்டுவியன் - அறிகுறிகள்:-

* கடிபட்ட இடத்தில் வலி (சிலருக்கு வலி இல்லாமலும் இருக்கலாம்).

* வீக்கம் ஏற்படும்.

* பார்வை மங்கும். கண் இமை சுருங்கும்.

* நாக்குத் தடிக்கும். பேச்சு குழறும். வாயில் எச்சில் வடியும்.

* மூச்சுத் திணறல் ஏற்படும். நினைவாற்றல் குறையும்.

* கட்டுவியன் கடித்தால் இந்த அறிகுறிகளுடன் வயிற்று வலியும்

இருக்கும்.

கண்ணாடி வியன் மற்றும் சுருட்டைப் பாம்பு - அறிகுறிகள்:-

*கடிபட்ட உடன் அதிக வலி.

* கடிபட்ட இடத்தில் வீக்கம் (கண்ணாடி வியன் கடித்தால் வீக்கம்

இல்லாமலும் இருக்கலாம்).

* கடிபட்ட இடம் நிறம் மாறும்.

* மூச்சுத் திணறல், வாந்தி, சோர்வு ஏற்படும்.

* உமிழ் நீர், வாந்தி, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.

* சிறுநீரகம் பாதிக்கப்படும்.

* பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம்.

* எந்த பாம்பு கடித்தாலும் உடனடி சிகிச்சை அவசியம்.

* வலி நிவாரண மாத்திரைகளை உங்கள் இஷ்டத்துக்குச் சாப்பிடாதீர்கள். சிறுநீரகத்தில் பாதிப்பு ஆரம்பித்து செயலிழப்பு வரை செல்லும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes