இதய நோயாளிகள் கவனத்திற்கு

இதயத் துடிப்பு உயிருக்கு முக்கியம். இதயம் நன்றாக வேலை செய்ய வேண்டுமானால், இதயத் தசைகள் நன்றாக வேலை செய்வது அவசியம். வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இதய நோய் பிரச்னை பல பெயோருக்கு உள்ளது.

வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இன்றைய இளைஞர்களும் இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகத் தொடங்கியுள்ளனர். பெயவர்களுக்கு ரத்தக் குழாயின் குறுக்கு விட்ட அளவு குறையத் தொடங்கி, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடுகிறது.

இந்த இடத்தில்தான் இதய நோயாளிகளுக்கு கொழுப்புச் சத்து குறைவான உணவு முக்கியத்துவம் பெறுகிறது. சர்க்கரை நோயாளிகளும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

குளிர் பானங்கள், சர்க்கரை உள்ளிட்ட இனிப்பு வகைகள், கொழுப்புச் சத்து நிறைந்த சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து சாப்பிடும் நிலையில் கார்போஹைட்ரேட் சத்து அதிகமாகி, கொழுப்புச் சத்தாக உருமாறும்.

இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகச் சேரும் கொழுப்புச் சத்து ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்த ஆரம்பிக்கும். இவ்வாறு ரத்தக் குழாய்களில் அடைப்பு --அதைத் தடுப்புதற்கு உணவு முறை முக்கியப் பங்காற்றுகிறது.

ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் --காய்கறிகள், பழங்களில் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. குறிப்பாக மாம்பழம், ஆரஞ்சு, பப்பாளி உள்ளிட்ட பழங்களில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம்.

உணவில் உள்ள கரையும் நார்ச்சத்து (பருப்பு, ஓட்ஸ் உள்ளிட்ட தானிய வகைகள், பழ வகைகளில் இத்தகைய நார்ச்சத்து உள்ளது.) ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகப்பதைத் தடுக்கிறது. எனவே இத்ககைய உணவு இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

சர்க்கரை நோயாளிகளைப் போலவே இதய நோயாளிகளும் உணவு ஆலோசனை நிபுணன் மதிப்பீட்டீன்படி, தேவையான கலோச் சத்தைக் கொண்ட உணவுத் திட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஏனெனில் இதய நோயாளி இஷ்டம்போல் சாப்பிட்டால், உடல் எடை அதிகக்கும் - இதயம் திணறும். தீவிர உடற்பயிற்சியை இதய நோயாளிகள் செய்ய முடியாது. இதனால்தான் உணவில் அக்கறை செலுத்தி உடல் எடை பராமப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இதய நோயாளிகள் காலை எழுந்தவுடன் ஒரே நேரத்தில் அதிக அளவு குடிநீர் குடிக்கக் கூடாது. நாள் முழுவதும் இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக குடிநீர் குடிக்கலாம். இதய நோயாளிகள் சப்பாத்தி மட்டுமே சாப்பிட வேண்டும் என நினைக்க வேண்டாம்.



0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes