வெர்ஜின் மொபைல் தரும் விஜாஸ்



இந்திய மொபைல் சந்தையில் தொடர்ந்து பல்வேறு புதுமையான வசதிகளைத் தந்து கொண்டிருக்கும் வெர்ஜின் மொபைல் நிறுவனம் அண்மையில் இலவசமாக மியூசிக் பைல்களை டவுண்லோட் செய்திடும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் வி-ஜாஸ் மொபைல் போன் அறிமுகத்துடன் இது தரப்படுகிறது.கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் உருவாகியுள்ள இந்த போனை வாங்குவோர் ஒரு லட்சம் பாடல்களைக் கூடுதல் கட்டணமின்றி இறக்கிப் பதிவு செய்து கேட்டு மகிழலாம்.இந்திய மற்றும் தென்னிந்திய பாடல்களுடன் உலகப் புகழ் பெற்ற பாடல்களும் இந்த வகையில் கிடைக்கின்றன.தமிழ்,இந்தி,ஆங்கிலம் என எந்த மொழிப்பாடல்களும் இத்திட்டத்தில் கிடைக்கின்றன.திரைப்படப் பாடல் மட்டுமின்றி ஆன்மீகப்பாடல்கள்,ராக் இசைப் பாடல்களும் உள்ளன.

இந்த போனுடன் 1 ஜிபி ஹார்ட் தரப்படுவதால் அணைத்து பாடல்களையும் இதில் பதிந்து வைத்துக் கேட்டு மகிழலாம்.இது ஒரு பார் டைப் மொபைல் போன். 106x46x15.8 மிமீ அளவில் வடிவமைப்பு கொண்டது.இதன் எடை 97 கிராம். 2 அங்குலத்தில் அகல வண்ணத்திரை,மியூசிக் பிளேயர்,தனியான மியூசிக் கீகள்,எப்.எம்.ரேடியோ,லவுட் ஸ்பீக்கர்கள்,வீடியோ பிளேபேக்,1.3 எம்பி கேமரா,1000 எஸ்.எம்.எஸ். வரை சேமிக்கும் வசதி,1000 முகவரிகளைக் கொள்ளக்கூடிய அட்ரஸ் புக் மற்றும் புளு டூத் எனப் பல வசதிகளையும் கொண்ட இந்த வி-ஜாஸ் மொபைல் தொலைபேசியின் குறியீட்டு விலை ரூ.4,250.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes