ரூ.1,300க்கு மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 207

சிறுவர்களுக்கும், வீட்டில் மற்றும் அலுவலகங்களில் நமக்கென உதவிடுபவர்களுக்கும் குறைந்த விலையில் போன்களை வாங்கிக் கொடுக்கத் திட்டமிடுபவர்களுக்கு அண்மையில் வெளியான மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 207 மொபைல் உகந்ததாய் உள்ளது.

இரண்டு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த போனில், ஜி.எஸ்.எம். மினி சிம் பயன்படுத்தலாம். இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம்.

இது ஒரு பார் டைப் போன். இந்த போனின் பரிமாணம் 113.2X 47.5 X 14.5 மிமீ. கருப்பு மற்றும் மஞ்சள் கலந்த வண்ணத்தில் கிடைக்கிறது. திரை 1.77 அங்குல அகலத்தில் உள்ளது.

128X160 பிக்ஸெல்களில் திரைக் காட்சி கிடைக்கிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் இதன் நினைவகத்தினை 8 ஜிபி வரை உயர்த்தலாம்.

போன் புக்கில் 500 எண் முகவரிகளை இணைக்கலாம். புளுடூத் வசதி உள்ளது. யு.எஸ்.பி. போர்ட் தரப்பட்டுள்ளது.

0.3 மெகா பிக்ஸெல் திறனுடன் கேமரா உள்ளது. டிஜிட்டல் ஸூம் கொண்ட கேமரா வீடியோ திறனுடன் கிடைக்கிறது.

மியூசிக் பிளேயர் MP3, MIDI, MP4, 3GP ஆகிய பார்மட் பைல்களை இயக்குகிறது. இபுக் ரீடர் மற்றும் ஆர்கனைசர்கள் தரப்பட்டுள்ளன.

பட்ஜெட் விலையில் கூடுதல் வசதிகளுடன் உள்ள இந்த போனை ஒரு மாற்றுப் போனாகவும் வைத்து இயக்கலாம்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes