காட்சித் திரைகள் ஒரு விளக்கம்

மொபைல் போன், டேப்ளட் பிசி, தொலைக்காட்சிப் பெட்டிகள் அல்லது கம்ப்யூட்டர் மானிட்டர்கள் என எதனைத் தயாரித்து விற்பனை செய்பவராக இருந்தாலும், தங்களுடைய காட்சித் திரைகள் தான் மற்றவற்றைக் காட்டிலும் மிகச் சிறப்பான திரைகள் என விளம்பரப்படுத்துகின்றனர்.

இதனைக் கூறுகையில், சில வழக்கமான சொற்களைப் பயன்படுத்துகின்றனர். அவை –– Super AMOLED, LED, IPS, SuperIPS எனப் பலவகைப்படுகின்றன. இவற்றில் சில தொழில் நுட்பங்களின் உண்மையான பெயர்கள். சிலவோ, விளம்பர நோக்கில் அமைக்கப்பட்ட மற்றும் சின்ன சின்ன மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட சொற்களாகும். இங்கு இந்த சொற்கள் காட்டும் தொழில் நுட்பங்கள் என்னவென்றும் அவை எதனைக் குறிக்கின்றன என்றும் காண்போம்.

அடிப்படையில் இவை எல்லாம் நாம் எண்ணுவதைக் காட்டிலும் மிக எளிமையாகத் தெரிந்து கொள்ளக் கூடியவை தான். இந்தக் காட்சித் திரைகளைப் பெரிய அளவில் பார்த்தால், மூன்று வகைகளில் பிரித்திடலாம். அவை –– LCD, OLED, மற்றும் plasma ஆகும். மிக எளிமையான முறையில் இவற்றை இங்கு காணலாம்.


1. பிளாஸ்மா (plasma):

இப்போதெல்லாம், பிளாஸ்மா காட்சித் திரைகள், மிகப் பெரிய ஹை டெபனிஷன் டிவிக்களிலும், டிஜிட்டல் சைன் போர்டுகளிலுமே பயன் படுத்தப்படுகின்றன. மாறுபட்ட ஒளிக் காட்சியைக் காட்ட இதனைப் பயன்படுத்து கின்றனர். இவற்றில் வண்ணங்கள் சிறப்பாகக் காட்டப்படுகின்றன.

எந்த ஒரு கோணத்தில், காட்சித் திரையிலிருந்து விலகி இருந்து பார்த்தாலும், வண்ணங்கள் இடம் மாறாது. எனவே தான், பொது இடங்களில் விளையாட்டு நிகழ்வுகளைக் காட்ட பெரும்பாலும் இது பயன்படுகிறது. ஒரு வண்ணத்தைத் திரைக்குக் கொண்டு வரும் நேரம் (response time)இந்த வகைத் திரையில் மிக மிகக் குறைவு.

இதனால், ஒரு வண்ணத்தில் இருந்து இன்னொரு வண்ணத்திற்கு எந்த பிசிறலும் இல்லாமல் உடனடியாக மாறக் கூடியவை பிளாஸ்மா திரைகளாகும். ஆனால், பிளாஸ்மா திரைகள் இயங்க அதிக மின் சக்தி தேவை; திரையின் தடிமனும் அதிகமாகவும் கனமாகவும் இருக்கும். எனவே இவற்றை மொபைல் போன்களிலும், டேப்ளட் பிசிக்களிலும் பயன்படுத்தவே முடியாது.

சிறிய அளவில் இதன் திரை அமைக்கப்பட்டால், பெரிய அளவில் ரெசல்யூசன்களை இதில் கொண்டு வர இயலாது. தொடக்கத்தில் ஒரே அளவிலான ஒரு பிளாஸ்மா திரைக்கும் எல்.சி.டி. திரைக்கு மான விலையில் நிறைய வித்தியாசம் இருந்தது. தற்போது இந்த வித்தியாசம் வெகுவாகக் குறைந்து உள்ளது.


2. ஓ.எல்.இ.டி. (OLED Organic Light Emitting Diode):

டிஜிட்டல் டிஸ்பிளே தொழில் நுட்பத்தில், அண்மைக் காலத்தில் மார்க்கட்டைக் கலக்கும் தொழில் நுட்பம் இது. சில விளம்பரங்களில் இதனை AMOLED Active Matrix Organic Light Emitting Diode எனவும் குறிப்பிடுகின்றனர். இந்த முதல் இரண்டு இணைப்பு சொற்களும், இதில் பிக்ஸெல்கள் எப்படி அடுக்கப்பட்டு இயங்குகின்றன என்று விளக்குகின்றன.

காட்சியைக் கட்டுப் படுத்தும் கண்ட்ரோலர் எப்படி ஒவ்வொரு சிறிய பிக்ஸெல்லையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டுள்ளது என்பதை இது விளக்குகிறது. இருந்தாலும், இதில் மட்டுமே Active Matrix என்ற வகை உள்ளது என்று கூற இயலாது. இப்போது வரும் நுகர்வோர் சாதனங்களில் உள்ள OLED and LCD திரைகள் அனைத்துமே Active Matrix வகையையே பயன்படுத்துகின்றன. OLED வகைத் திரைக் காட்சியும் பிளாஸ்மா

போலவே செயல்படுகிறது. இங்கு ஓர் ஒளிக்கற்றையைக் கொண்டு வர கேஸ் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இதில் உள்ள எலக்ட்ரோடுகள், ஒளியை வெளிப்படுத்தும் ஓர் ஆர்கானிக் பாலிமரைக் கொண்டு வருகின்றன. இங்கு பாலிமர் என்பது, திரும்பத் திரும்ப வரும் மிகச் சிறிய மாலிக்யூல்கள் கொண்ட பெரியதொரு மாலிக்யூல்கள் ஆகும்.

OLED தொழில் நுட்பம் நிறைய அனு கூலங்களைக் கொண்டது. மிகக் குறைந்த அளவிலேயே மின்சக்தியைப் பயன்படுத்து கிறது. மிகக் குறுகிய அளவில், நேரடியாக ஒளியை வெளிப்படுத்துகின்றன. அதனாலேயே, ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. வண்ணத்தைத் திரைக்குக் கொண்டு வரும் response time இதில் மிக மிக வேகமாகவும் குறைவான நேரத்திலும் இயங்குகிறது.

இதன் ஒரே பிரச்னை இதன் தயாரிப்பு செலவு தான். எல்.சி.டி. அல்லது பிளாஸ்மா வகைத் திரையைக் காட்டிலும், இதனைத் தயாரிக்க அதிக பொருட்செலவு ஆகும்.

தற்போது Super AMOLED Plus என சில வகைத் திரைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. OLED தொழில் நுட்பத்தில், ஆங்காங்கே மிகச் சிறிய வேறுபாடுகளைக் கையாண்டு இவை வெளிவரு கின்றன. ஆனால், செயல்பாட்டின் அடிப்படையில் இவை AMOLED தொழில் நுட்பம் கொண்ட வையே.


3. எல்.சி.டி. (LCD–Liquid Crystal Display):

மிக அதிகமான அளவில் பயன்படுத்தப்படும் காட்சித் திரை இதுதான். ஹை டெபனிஷன் டிவி, டெஸ்க்டாப், லேப்டாப் மானிட்டர் கள், டேப்ளட் பிசிக்கள் மற்றும் மொபைல் போன் திரைகள் என எங்கும் இது பயன் பாட்டில் உள்ளது. இதன் வகைகள் எனப் பல பேசப்பட்டாலும், அடிப்படையில் மூன்று வகைகள் பிரபலமானவை. அவை –– twisted nematic, InPlane Switching, and patterned vertical alignment.


எல்.சி.டி. ட்விஸ்டட் நெமாடிக் (டி.என். அல்லது டி.என்.பிலிம் TN or TNFilm):

இவ்வகைத் திரைகளின் பேனல்கள் மிக மலிவானவை. எனவே அதிக எண்ணிக்கையில் எளிதாகத் தயாரிக்க முடியும். வண்ணத்தைத் திரைக்குக் கொண்டு வரும் response time இதில் மிக மிகக் குறைவாகும். 2 மில்லி செகண்ட் கூட ஆகாது. ஆனால், மொத்த காட்சி வெளிப்பாட்டில் இவை சில குறைகளைக் கொண்டுள்ளன.


எல்.சி.டி. இன் - பிளேன் ஸ்விட்சிங் (IPS):

மேலே டி.என்.பிலிம் வகை எல்.சி.டி. திரைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கும் வகையில், ஹிடாச்சி நிறுவனம் இந்த தொழில் நுட்பத்தினை வடிவமைத்தது. மற்ற எல்லா வகைகளிலும் இது உயர்ந்து இருந்தாலும், இதன் ரெப்ரெஷ் ரேட் தேவையான அளவு இல்லாததால், அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை.


எல்.சி.டி. வெர்டிகலி அலைன்டு (VA Vertically Aligned):

மேலே கூறப்பட்ட இரண்டு வகைகளுக்கும் இடையேயான தன்மையைக் கொண்டது. ஐ.பி.எஸ். தொழில் நுட்பம், சற்று தாமதமாகவும், மந்த ஒளிக் காட்சியாகவும் திரையில் செயல்பட்டது. டி.என். வகை வேகமாகவும், நல்ல வெளிச்சக் காட்சியாகவும் இருந்தாலும், மொத்தத்தில் காட்சி தன்மையில் குறை வாகவே இருந்தது. இவற்றிற்கு இடையே வெர்டிகலி அலைன்டு தொழில் நுட்பம் உள்ளது. ஒரு சில நிறுவனங்கள் இந்த வகை தொழில் நுட்பத்தினைச் சிறப்பாகத் தருவதாகக் கூறி வருகின்றன.


4. எல்.இ.டி. (LED) :

மேலே கூறப்பட்ட வற்றில் இருந்து சற்றே சில மாறுதல் களுடன் எல்.இ.டி. (LED (lightemitting diode) மற்றும் டி.எப்.டி. காட்சித் திரைகள் தற்போது பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொலைக் காட்சிப் பெட்டிகளில் இவை பயன்படுத்தப்படுகையில், பெரிய அளவில் வண்ணங்கள் கிடைக்கின்றன. மிகவும் குறைவான மின்சக்தியைப் பயன்படுத்தும் இவை அதிக நாட்கள் உழைக்கக் கூடியவையும் ஆகும்.


5. டி.எப்.டி (TFT:ThinFilm Transistor)

இந்த தொழில் நுட்பம் மேலே கூறப்பட்ட அனைத்து activematrix திரைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தயாரிப்பு செலவு குறைவான வகைகளில் இது இடம் பெறுகிறது. மொபைல் போன்களில் பெரும் பாலும் இது பயன்படுத்தப்படுகிறது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes