"சிடி' யில் டேட்டா பதித்தல்

சிடி ரைட்டர்கள் எது வாங்கினாலும் அத்துடன் சிடியில் டேட்டா எழுதுவதற்கான புரோகிராம் ஒன்று இணைத்துத் தரப்படுகிறது. இந்த புரோகிராம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு மாதிரியாக இருப்பதால் இங்கு சிடியில் எழுதுவதற்கான சில அடிப்படை விஷயங்கள் தரப்படுகின்றன.


1. முதலில் நீங்கள் அந்த புரோகிராம் தரும் விஸார்ட் (டயலாக் பாக்ஸ் மாதிரி) மூலம் இயக்கப் போகிறீர்களா? அல்லது நீங்களே எழுதும் வகை பிரிவினை தேர்ந்தெடுத்து அமைக்கப்போகிறீர்களா என்று சாய்ஸ் கேட்கப்படும். விஸார்ட் மூலம் எழுதப் போகிறேன் என்பதனை செலக்ட் செய்திடவும். இதில் பல வசதிகள் தரப்படும்.


2. அடுத்து பெரும்பாலும் என்ன வகை சிடியில் எழுதப்போகிறீர்கள் என்று கேட்கப்படும். அதாவது ஆடியோவா? அல்லது வீடியோ சிடியா? என்று கேட்கப்படும். தகவல்களைப் பதிந்து வைக்க விரும்பினால் data என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் உங்களி டம் உள்ள மற்ற ஆடியோ சிடிக்களைப் பயன்படுத்தி புதிய ஆடியோ சிடி ஒன்று தயாரிப்பதாக இருந்தால் music என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மியூசிக் சிடி மற்றும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய பைல்கள் என்றால் உங்களுக்கு CDR வகை சிடிக்கள் தான் சரியான தேர்வாக இருக்கும்.

உங்களிடம் CDRW வகை சிடி இருந்தால் அதனை டேட்டா எழுதப் பயன்படுத்தவும். இதற்குக் காரணம் சில மியூசிக் பிளேயர்கள் CDRW வகை சிடிக்களை ஏற்றுக் கொள்ளாது என்பதே.


3. அடுத்த வேலை பைல்களைத் தேர்ந்தெடுப்பதுதான். பெரும்பாலான இவ்வகை புரோகிராம்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரர் வகையிலான விண்டோக் களைத் தரும். எனவே பைல்களைத் தேர்ந்தெடுத்து அமைப்பது எளிதான வேலையாக அமையும். இதை ட்ராக் அண்ட் ட்ராப் முறையிலும் மேற்கொள்ளலாம்.


4. பைல்களைத் தேர்ந்தெடுத்தவுடன் இனி சிடியில் எழுதுவதற்கான ஆப்ஷன்ஸ் கிடைக்கும். பெரும்பாலான புரோகிராம்களில் டேட்டா எழுதுவதற்கு டெஸ்ட் வகை ஒன்றினைத் தரும். அதாவது நேரடியாக எழுதத் தொடங்கி பின் எழுதுவதில் பிரச்னை ஏற்பட்டு சிடி வீணாகிவிடாமலும் அனாவசியமாக நேரம் செலவழியாமலும் இருக்க இந்த ஏற்பாடு.

இந்த சோதனை முறையை முதல் முதலில் அந்த சிடி டிரைவில் எழுதுகையில் மேற்கொள்ளலாம். பின் அதில் எதுவும் பிரச்னை இல்லை என்று தெரிந்து கொண்டால் நேரடியாக எழுதத் தொடங்கலாம்.


5. அடுத்ததாக சிடி எந்த வேகத்தில் எழுத வேண்டும் என்பதனை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக் கவில்லை என்றால் சிடி டிரைவரே குறிப்பிட்ட வேகத்தைத் தேர்ந்தெடுக்கும். அல்லது அதற்கு முந்தைய முறையில் எழுதிய வேகத்தையே எடுத்துக் கொள்ளும்.


6. சிடியில் எழுதி முடித்தவுடன் டேட்டா சரியாகப் பதியப்பட்டுள்ளதா என்று சோதனை செய்வதற்கான ஆப்ஷனையும் இங்கு தேர்ந்தெடுக்கலாம். இதற்கான நேரம் மிகவும் குறைவு என்பதால் இதனை எப்போதும் மேற்கொள்வது நல்லது.


7. இனி சிடியில் டேட்டா எழுதப்படும் நேரம். இந்நேரத்தில் மற்ற எந்த செயலையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்வது நல்லதல்ல. சிடி டிரைவ் செயல்பட டேட்டாவைத் தக்க வைத்து அனுப்ப அதிகமான ராம் மெமரி தேவைப்படும். இல்லை என்றால் buffer underrun error என்னும் பிழைச் செய்தி வரும். சிடியில் எழுதப்படுகையில் டேட்டா தொடர்ந்து சிடி டிரைவிற்கு அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

எழுதப்படும் டேட்டாவிற்கு இணையாக டேட்டா செல்ல வேண்டும். ஆனால் இவ்வாறு கிடைக்காத நிலையில் சிடியில் எழுதப்படும் செயல் பாதிக்காத வகையில் புரோகிராம் அமைக்கப்படும். இதனால் எழுதி முடித்தபின்னர் எத்தனை முறை இந்த நிகழ்வு ஏற்பட்டது;

ஆனால் சமாளிக்கப்பட்டது என்ற செய்தி கிடைக்கும். எனவே தான் சிடியில் எழுதுகையில் வேறு எந்த செயல்பாட்டையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளக் கூடாது.


8. சிடியில் எழுத டிரைவுடன் வரும் (பெரும்பாலும் நீரோ புரோகிராம்) புரோகிராமைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. விண்டோஸ் எக்ஸ் பி புரோகிராமில் இதற்கான புரோகிராம் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் உங்கள் சிடி டிரைவ் டைரக்டரியைத் திறக்கவும்.

ட்ராப் அண்ட் ட்ராக் மூலம் பைல்களை இழுத்து வந்து டைரக்டரியில் போடவும். “Files ready to be written to the CD” என்ற செய்தி கிடைக்கும். சிடியில் எழுத நீங்கள் தயாராக இருந்தால் உடனே “Write these files to the CD” என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். அவ்வளவுதான்; பைல்கள் எழுதப்பட்டுவிடும்.

இன்னொரு முறையிலும் பைல்களை எழுதலாம். பைலின் பெயர் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Send To பயன்படுத்தி பைல்களை அனுப்பவும். பின் மேற்கண்ட முறையில் மெனு கிடைக்கும். அதன்படி பைல்களை எழுதலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes