டாடா டொகொமோ தரும் பிளாக் பெரி கர்வ் 8520

ஆர்.ஐ.எம். மற்றும் டாட்டா டொகொமோ இணைந்து பிளாக்பெரி கர்வ் 8520 மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளன.

ஏற்கனவே அறிமுகப்படுத்திய பிளாக் பெரி மொபைல் போன்களுக்கு வாடிக்கையாளர்கள் தந்த வரவேற்பை அடுத்து இந்த ஸ்மார்ட் போன் தரப்பட்டுள்ளதாக, டாட்டா டெலிசர்வீசஸ் துணைத்தலைவர் அறிவித்தார்.

மிக ஸ்லிம்மான, பலவித வசதிகளை ஒருங்கிணைத்துத் தரும் ஸ்மார்ட் போனாக பிளாக் பெரி கர்வ் 8520 அமைந்துள்ளது.

இதில் டச் சென்சிடிவ் ட்ராக் பேட் அமைக்கப்பட்டுள்ளது. மீடியா இயக்கத்திற்கென தனி கீகள் உள்ளன. குவெர்ட்டி கீ போர்டு டெக்ஸ்ட்டிங் பணியை எளிதாக்குகின்றன. வை–பி இணைப்பிற்கான வசதி இணைக்கப் பட்டுள்ளது. முழுமையான எச்.டி.எம்.எல். பிரவுசிங் அனுபவம் கிடைக்கிறது.

தொடர்ந்து 4.5 மணி நேரம் பேசலாம். 17 நாட்கள் இதன் பேட்டரி சார்ஜ் இல்லாமல் இயங்குகிறது. இமெயில், மெசேஜிங், சோஷியல் நெட்வொர்க்கிங் இணைப்பு மற்றும் மொபைல் இன்டர்நெட் வசதிகளை வெகு வேகமாகத் தருகிறது.

அத்துடன் மியூசிக் பிளேயர், வீடியோ பிளேயர் ஆகிய வசதிகளையும் கொண்டு மிகச் சிறப்பாக இயங்குகிறது. இதன் குறியீட்டு விலை ரூ. 14,990.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes