எல்லாம் இளையராஜா செயல்

"எல்லாம் அவன் செயல்' படத்தையடுத்து ஆர்.கே. நடிக்கும் புதிய படம் "அழகர் மலை'. இந்தப் படத்தை கருமாரி மூவிஸ் பட நிறுவனம் சார்பில் கந்தசாமி தயாரிக்கிறார். "தாமிரபரணி' படத்தில் நடித்த பானு கதாநாயகியாக நடிக்கிறார். வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குபவர் எஸ்.பி.ராஜ்குமார்.

படத்தைப் பற்றி நாயகன் ஆர்.கே. கூறியதாவது:

"எல்லாம் அவன் செயல்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. அதில் நகரப் பின்னணியில் கதை சொல்லப்பட்டிருந்தது. "அழகர் மலை' கிராமத்துப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் நாட்டுக்குத் தேவையான நல்ல மெúஸஜை ஜனரஞ்சகமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். படத்தில் வடிவேலுவின் காமெடி பெரிய அளவில் பேசப்படும். பாடல்களிலும் பின்னணி இசையிலும் இளையராஜா தனி கவனம் செலுத்தியிருக்கிறார். பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளன. தவிர, இளையராஜா முதல்முறையாக ஒரு பாடலில் தோன்றி நடித்துள்ளார். "எல்லாம் அவன் செயல்' போல "அழகர் மலை' படமும் பெரிய வெற்றி பெறும். அதில் இளையராஜாவுக்கு முக்கியப் பங்கு இருக்கும் என்றார்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes