தீவிரவாதத்துக்கு எதிரான "நிமிடங்கள்'

தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.எஸ்.கீதாகிருஷ்ணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் "நிமிடங்கள்' என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் இவரே.

தெலுங்கின் இளம் முன்னணி நடிகர் சஷாங் கதாநாயகனாக நடிக்கிறார். கன்னடத்தின் முன்னணி நடிகை பியாங்கா தேசாய் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சுமன், அதுல்குல்கர்னி, கிரீஷ்கர்னாட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மகாபலிபுரத்தில் படப்பிடிப்பில் இருந்த இயக்குநரிடம் "நிமிடங்கள்' பற்றி கேட்டபோது...

""இது சர்வதேச தீவிரவாதத்தைப் பற்றிய கதை. தீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையும் நிம்மதியும் பாதிக்கப்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவன் தீவிரவாதத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுவதை வழக்கத்துக்கு மாறான சினிமா வடிவில் வழங்குகிறோம். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் படம் தயாராகிறது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது'' என்று கூறும் "நிமிடங்கள்' இயக்குநர் ஏ.எஸ்.கீதாகிருஷ்ணா, இதற்கு முன்பு பிரபுதேவா, சிம்ரன் நடித்த "டைம்' என்ற தமிழ்ப் படத்தை இயக்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவு -முரளி, எம்.வி.ரகு. கலை -வாசு. தயாரிப்பு -புளூஃபாக்ஸ் சினிமா


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes