மஞ்சள் மகிமை


பண்டைய இந்தியர்கள் முற்கால அரேபியர்கள் முதலியோர் போற்றிப் புகழ்ந்த மசாலா - மஞ்சள். இதன் மேன்மை குணத்தை இன்று நவீன மருத்துவம் உறுதிபடுத்தியுள்ளது.

மஞ்சள் முகமே வருக / மங்கள முகமே வருக - எனக் கவிஞர் கூறியது போலத் தமிழகப் பண்பாட்டில் மஞ்சள் செழுமை, வளமை, மங்கலத்தைக் குறிப்பாகக் கருதப்படுகிறது.

மஞ்சள் தடவிய புத்தாடை, மஞ்சள் பூசிய கயிறு, மஞ்சள் பூச்சுபெற்ற அரிசி, பிடித்து வைத்த மஞ்சள், சுவரில் திறுநீறு போல இடப்படும் மஞ்சள்கீற்று , மஞ்சள் கரைத்த கலசநீர் எனத் தமிழப் பண்பாட்டில் மஞ்சள் இரண்டறக் கலந்துள்ளது.

தெற்காசிய நாடுகளான ஜாவா, இந்தோனேசியா, பாலித்தீவுகள் முதலியவற்றில் தமிழகப் பண்பாட்டுத் தாக்கம் புலப்படுகிறது. சோழர்கள் - ராஜராஜ சோழன் முதலியோர் படையெடுத்துச் சென்றபோது ஏற்பட்ட தாக்கமே இது. இதன் விளைவாக இப்பகுதியிலும் மஞ்சள் மங்களக் குறியாக்க கருதப்படுகிறது என்பது சிறப்புச் செய்தி.

எடுத்துக்காட்டாக, இசுலாமியா தாக்கத்தின் பின்பும் இந்தோனேசியா, பாலித்தீவுகளில் மஞ்சள் கலந்த அரிசி புனிதமாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட சடங்குகளில் நாசி குளிர் என்னும் இந்தக் கலவை வழங்கப்படுகிறது என்பது சிறப்புச் செய்தி.

உணவிலும் இந்தியாவிலும் தெற்காசியாவில் மஞ்சளின் பயன்பாடு மிகுதி. இந்தியாவில் மஞ்சள் உலரவைத்து, இடித்து, பொடித்து மஞ்சள் பொடியாக பலரால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தெற்காசியாவில் மஞ்சள் கிழங்கு அப்படியே கறி சமைக்கப்படுகிறது. சுமத்திரா இந்தோனேஷியாப் பகுதிகளில் மஞ்சளின் தழை நிறம்-மணம் சேர்க்க உணவில் பயன்படுத்தப் படுகிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வரும் வெகு பிரபலமான வசனம் எல்லோருக்கும் நினைவிலிருக்கும். வரிகேட்டு வரும் ஆங்கிலேய அதிகாரியிடம் ஆத்திரத்துடன் “நாற்று நாட்டாயா; களைபறித்தாயா” என்பதோடு “எம் பெண்டிருக்கு மஞ்சள் அதைத்துக் கொடுத்தாயா” எனக் கொதித்து முழங்கும் சிவாஜியின் வசனம் நம் காதுகளில் ரீங்காரமிடும். மஞ்சள் பூசுவது என்பது தமிழகம் மட்டுமல்ல உலகின் பல பண்பாடுகளில் உள்ள பழக்கம். மஞ்சள் உடலின் மீது சற்றே படிந்து பளபளப்புத் தரும்.

முகத்திற்குப் பொலிவூட்டமாய் மாறி ஆடைகளுக்கு நிறம் தரும் சாயம் தயாரிக்கவும் மஞ்சள் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரஞ்சு-சிவப்பு நிறம் தயாரிக்க; மஞ்சளுடன் தன்டிகோ சேர்த்து பொலிவான பச்சை நிறம் தயாரிக்க மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. பல சாயங்களை ஆடையில் படிந்து பிடித்துக் கொள்ள நிறமேற்றிகள் தேவை. ஆனால் மஞ்சள் நிறச் சாயம் சேர்க்க நிறமேற்றி தேவையில்ல. மஞ்சள் மூலம் ஏற்றப்படும் நிறம் பெருகாலம் தங்கி அமையாது. சூரிய ஒளியில் மஞ்சள் நிறம் தரும் வேதிப்பொருள்கள் சிதைத்து விடுவதால் மஞ்சள் மூலம் நிறமேற்றப்பட்ட ஆடைகள் வெகு விரைவில் அதன் ஆழமான நிறத்தை இழக்கும். ஆகவேதான் தினம் தினமும் மஞ்சள் பூசினாலும் முகம் மஞ்சள் கறை படிவதில்லை.

மஞ்சள் அறிவியல் பெயர் “குர்குமா லோங்கா” என்பதாகும். இதில் 100 இனம் மற்றும் 30 வகை உண்டு. விசிறி போன்ற தழை உடையது மஞ்சள். நீள்வட்ட வடிவில் ஒவ்வொரு தழையும் சுமார் 1-2 அடி நீறமாக சிறக்கும். செடி 3.5 அடி உயரம் வளரும். மண்ணிற்குள் அடித்தண்டாக - கிழங்காக மஞ்சள் இருக்கும்.

2-6 செ.மீ நீளமுடையது கிழங்கு. இச் செடியின் பூவும் மஞ்சள் நிறமுடையது. புனல் போன்ற தோற்றமுள்ளது இம்மலர்.

உலகின் மொத்த மஞ்சள் பயிரில் 80ரூ இந்தியாவில் உற்பத்தியாகிறது. சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. மஞ்சள் என்ற சொல்லே தமிழில் “மஞ்சள் நிறத்தை சுட்டுவதைப்போல “ஹல்கி” என்ற இந்திச்சொல், சில்வொர்டெர் என்ற டச்சுச்சொல் முதலியவும் மஞ்சள் செடி மற்றும் மஞ்சற் நிறம் இரண்டையும் குறிக்கிறது. அதுமட்டு மல்ல, டர்மரிச் என்ற ஆங்கில சொல் லத்தின் சொல்லான டொர்ரா மெனரட் அதாவது மஞ்சள் நிறம் தரும் மண் என்ற பொருள் நம் சொல்லிலிருந்து உருவானது ஆகும்.

மஞ்சளின் நிறத்தில் உள்ள குர்குமின்வகை வேதிப் பொருட்களின் விளைவே ஆகும். அது மட்டுமல்ல மஞ்சளின் காரச் சுவைக்கும் இந்த வேதிப்பொருளே காரணம். டரிமெரோன் வகை வேதிப்பொருட்கள் மற்றும் லிங்காபரின் வேதிப்பொருள் முதலியவை மஞ்சளின் மணத்திற்குக் காரணம்.

ஆர்த்தி கரைசல் மஞ்சளும் வெள்ளைச் சுண்ணாம்பும் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இரண்டும் கலந்ததும் கரைசல் இரத்தச் சிகப்பாக மாறுகிறது அல்லவா? சுண்ணாம்பு, காரப் பொருள் - ஆல்லி. அதுபோல அமிலம்- ஆசிடுனும் மஞ்சள் வினைவுரியும். ஆகவே மஞ்சள் வேதி சுட்டி – Chemical Indicater- ஆக பயன்படுத்தப்படுகிறது. PH 7.4-ல் மஞ்சளாக உள்ளது PH 8.6-க்கு மேல் சிவப்பாக மாறும்.

மேலும் குர்குமினாய்ட் வகை வேதிப்பொருட்கள் நுண்ணுயிர் கொல்லியாகவும் சீழ் எதிர்ப்பியாகவும் செயல் படுகிறது என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாரம்பரிய மருத்துவத்தில் வெட்டுப் புண்ணுக்கு மஞ்சள் பத்துபோடுவது. அம்மை தழும்பு ஏற்படாமல் தடுக்கப் பூசுவது போன்றவற்றில் மருத்துவ காரணி குர்குமினாய்டு வேதிப்பொருள்தான். மேலும் பாலுடன் மஞ்சள் சேர்த்து குடிப்பதன் வழி தொண்டைப் புண் ஆற்றுவது முதலிய பழக்கங்களையும் நவீன அறிவியல் உறுதிப்படுத்தியுள்ளது என்பது சிறப்பு.

“மஞ்சள் முகமே வருக / மங்கள முகமே வருக” எனக் கவிஞர் கூறுவது வெறும் வார்த்தைப் பந்தல் அன்று. 


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes