பிரபாகரன் சுட்டுக் கொலை:தப்பி ஓடும் போது சுற்றி வளைத்ததாக இலங்கை ராணுவம் அறிவிப்பு


கொழும்பு:இலங்கை ராணுவத்தின் முற்றுகையிலிருந்து தப்பி ஓடும் போது,விடுதலைப் புலித்தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.ராணுவத்துடன் நடந்த சண்டையில் புலித்தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோனி உட்பட,அந்த அமைப்பின் முக்கியத் தளபதிகளும் மரணம் அடைந்தனர் என்று இலங்கை அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 16ம் தேதி புலிகளின் கைவசம் இருந்த கடைசி கடற்கரைப் பகுதியையும் ராணுவம் கைப்பற்றியது.இதனால்,இங்குப் பதுங்கியிருந்த பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் அமைப்பின் தலைவர்கள் தப்பிச் செல்ல வழியில்லாமல் போனது.நேற்று முன்தினம் ஜோர்டானிலிருந்து நாடு திரும்பிய இலங்கை அதிபர் ராஜபக்ஷே ,"சண்டையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர்;சண்டை முடிவுக்கு வந்துவிட்டது" என அறிவித்தார்.இதை புலிகளும் ஒப்புக் கொண்டனர்.புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த எஞ்சிய 50 ஆயிரம் அப்பாவி தமிழர்களும் மீட்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

பிரபாகரன் சுட்டுக் கொலை:

நேற்று அதிகாலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சதுர கிலோமீட்டருக்கும் குறைவான பகுதியில் இலங்கை ராணுவம் இறுதிக்கட்ட தாக்குதலை நடத்தியது.இந்தச் சண்டையில் புலிகளின் முக்கியத் தளபதிகள்,நடேசன்,புலித்தேவன்,இளங்கோ,ரமேஷ்,சுந்தரம் மற்றும் கபில் அம்மான் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.பிரபாகரனின் மகனும்,புலிகளின் வான்படைத் தலைவருமான சார்லஸ் அந்தோனியும் கொல்லப்பட்டதாகவும்,அவரது சடலத்தைக் கைப்பற்றியதாகவும் ராணுவம் அறிவித்தது.இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே விடுதலைப் புலித்தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இலங்கை அரசு "டிவி"யில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டதாவது:நேற்று அதிகாலை புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த முள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்து,தாக்குதல் நடத்தினர்.கடும் சண்டைக்கு இடையே புலித்தலைவர் பிரபாகரன்,அங்கு நின்றிருந்த சிறிய வேன் ஒன்றில் ஏறி,சண்டை நடக்கும் பகுதியிலிருந்து தப்பி செல்ல முயன்றார்.அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்றும் வேகமாகக் கிளம்பியது.இதையடுத்து,ராணுவ வீரர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.இதில்,பிரபாகரன் கொல்லப்பட்டார்.அவருடன் தப்பிச் செல்ல முயன்ற புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் போட்டு அம்மான்,கடற்பிரிவுத் தலைவர் சூசை ஆகியோரும் கொல்லப்பட்டனர்.என்று தெரிவிக்கப்பட்டது.

இறந்தது யார்? யார் ?

இலங்கை ராணுவத்துடனான சண்டையில் நேற்று பலியான விடுதலை புலி அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பற்றிய விவரம்:
1.பிரபாகரன்...(விடுதலை புலிகள் தலைவர்) 

2.நடேசன்...(அரசியல் பிரிவு தலைவர்) 

3.பொட்டு அம்மான்....(உளவு பிரிவு தலைவர்) 

4.சூசை...(கடற்பிரிவு தலைவர்) 

5.புலித்தேவன்....(அமைதி செயலக தலைவர்) 

6.ரமேஷ் .....(தற்கொலை படை தலைவர்)

7.சார்லஸ் அந்தோணி.......(வான்படை மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவர்)

8.இளங்கோ......(போலீஸ் பிரிவு தலைவர்)

9.சுந்தரம்.....(மூத்த தலைவர்) 

10.கபில் அம்மான்.....(மூத்த தலைவர்)


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes