இருபது வயதினருக்கும் வரும் சிறுநீரகக் கல் பிரச்னை-தவிர்ப்பது எப்படி


அறுபது வயதினருக்கு வரும் பல நோய்கள் இன்று இருபது வயதினரையும் விட்டு வைப்பதில்லை.அதற்கு காரணம் அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் தான்.இன்றைய நவீன உலகில் அதிகமாக விற்பனையாகும் பிட்சா,பர்கர் போன்ற ஜங்க் புட் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  


இதனால் நாற்பது வயது முதல் அறுபது வயது வரை உள்ளவர்களுக்கு வந்து கொண்டிருந்த "சிறுநீரகக் கல் " பிரச்னை இப்போது இருபது வயதினருக்கும் சகஜமாக வருகிறது.

சிறுநீரகக் கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்

ஒபிசிட்டி,அதிக உப்பு,காரமான உணவு வகைகள்,கால்சியம் மாத்திரைகள் ஆகியவை தான் காரணம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். 

சிறுநீரகக் கல் என்பது,ஆண்களுக்கு தான் வரும்;பெண்களுக்கு மிக அரிது.அனால்,சமீப காலத்தில், வயதுகளில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான எண்ணிக்கையில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.  

நோய்க்கான காரணங்கள்

சில பொருட்களினால் சிறுநீர் அடர்கரைசலாகும் போது சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். சிறுநீரில் காணப்படும் இந்த பொருட்கள் சிறிய படிகங்களை உண்டாக்கி, அவை கற்களாக மாறலாம்.சில சமயம் சிறுநீரில் உள்ள அமிலச்சத்து,திடமாகி கற்களாகின்றன. சிறுநீர் கற்கள் உண்டாகி சிறுநீரகக் குழாய் வழியாக கீழே இறங்கும் வரை எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. சிறுநீரகக் கற்கள் சிறுநீர் குழாய் வழியாக கீழ்நோக்கி நகரும்போது வலியினை ஏற்படுத்தும். இவ்வலியானது, அடிக்கடி பின்புற விலாவின் இரண்டு பக்கங்களிலும் ஆரம்பித்து கீழ்நோக்கி நகரும். 

கற்களின் வகைகள்

கால்சியம் கற்கள் -அதிகமாக ஏற்படக்கூடியவை, அவை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆண்களுக்கு ஏற்படும். சாதாரணமாக 20 வயது முதல் 30 வயதுடையவர்களுக்கு ஏற்படும். திரும்பத் திரும்பத் ஏற்படும் தன்மையுடையது. கால்சியம் பிற பொருட்களான ஆக்ஸலேட் (மிக அதிகளவிளான பொருள்), பாஸ்பேட் அல்லது கார்போனேட் போன்றவையுடன் சேர்ந்து கற்களை உண்டாக்கும். 

யூரிக் அமில கற்கள் - இவைகளும் அதிக அளவில் ஆண்களுக்கு ஏற்படும். 

ஸ்ட்ருவைட் கற்கள் - (மெக்னீஸியம் அமோனியம்/ பாஸ்பேட் படிகங்களால் ஏற்படும் கல்) என்பது முக்கியமாக பெண்களில் சிறுநீர் குழாய் சம்பந்தமான தொற்று நோய் கண்டதினால் ஏற்படக்கூடியவை. அவை மிகப்பெரியதாக வளரக் கூடியவை. மேலும் சிறுநீரகங்கள், சிறுநீர்குழாய் அல்லது சிறுநீர் பையில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியவை.  

அறிகுறிகள்
  • பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரணடு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி
  • குமட்டல், வாந்தி
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • சிறுநீர் அளவு அதிகரித்தல்
  • சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்
  • அடிவயிற்றில் வலி
  • வலியோடு கூட சிறுநீர் கழித்தல்
  • இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்
  • ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி
  • சிறுநீரின் நிறம் இயற்க்கைக்கு மாறாக காணப்படுதல்

தடுப்பு முறைகள்

சிறுநீரகக் கற்கள் உருவாவதற்குக் காரணம்,போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான் என்று முன்பு சொல்வதுண்டு.உடலுக்கு போதுமான தண்ணீர் தேவை.அது வறண்டு போகக் கூடாது.அதனால் நாளுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்வர். 

தண்ணீராகவோ,பழரசமாகவோ,திரவ உணவாகவோ உடலுக்குள் போக வேண்டும்.அப்போது தான் இப்படிப்பட்ட சிறுநீரகக் கற்கள் சேராது. 

உப்பு சார்ந்த பிஸ்கட்,உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்னை எளிதில் ஏற்படும்.அதனால்,உணவிலும் உப்பைக் குறைப்பது நல்லது.இதுபோல அதிக சர்க்கரையும் சேர்க்கக் கூடாது.  

சிறுநீரககற்களின் தன்மையை பொருத்து மருத்துவரின் ஆலோசனையின் படி, மருந்தோ அல்லது பிற முறைகளையோ கையாண்டு, கற்கள் திரும்பத் திரும்ப ஏற்ப்படுவதை தடுக்கலாம. 

சாப்பிட வேண்டியவை 

சிறுநீரகக் கல் வராமல் தடுக்க மட்டுமல்ல,உடல் ஆரோக்கியத்துக்கும் தண்ணீரும்,ஜூஸ்களும் அடிக்கடி சாப்பிடுவது நல்லது.உடல் வற்றிப் போகக் கூடாது என்பதற்கு இந்த இரண்டும் முக்கியம்.ஆனால் இளம் வயதினருக்கு இரண்டுமே எதிரிகள். 

டப்பாவிலும்,பாட்டிலிலும் அடைக்கப்பட்ட கோலா ஜூஸ்கள் தான் பிடித்தமாக இருக்கின்றது.அதுபோல,பிட்சா,பர்கர் போன்ற ஜங்க் உணவுகள் சாப்பிடுவதில் தான் அதிக அக்கறை டீன் ஏஜினருக்கு.அதை மாற்றி,காய்கறி மற்றும் ப்ரூட் சாலட்களை சாப்பிடலாம்.தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால்,தொழிலும் பளபளப்பு அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டியவை 

சிறுநீரகக் கல்நோய் வராமல் தடுக்க உணவில் சுண்ணாம்புச்சத்து அதிகம் கொண்ட 
தக்காளி, கோஸ், வேர்க்கடலை, காலிப்பிளவர், பால் போன் றவைகளை தவிர்க்க வேண்டும். மாமிச உணவுகள் குறிப்பாக முட்டை, நண்டு ஆகியவற்றையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

ஒபிசிட்டி உள்ளவர்கள்  

சிறுநீரகக் கற்கள் யாருக்கு வரும் என்றெல்லாம் சரியாக சொல்ல முடியாது.இருபது வயதை தாண்டியவர்களுக்கும் வருவதால்,அனைவரும் உஷாராக இருக்க வேண்டும்.குண்டாக(ஒபிசிட்டி) இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சரியாக சிறுநீர் போகாமல் இருந்தால்,doctaridam காட்டலாம்.சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.அதனால்,இதெல்லாம் வராமல் பார்த்துக் கொள்ள உணவு முறையில் இளம் வயதினர் மாற்றத்தை கொண்டு வந்தால் நல்லது.  

கால்சியம் குறைக்கலாமா  

சிறுநீரகக் கல்லில் கால்சியம் கற்கள் தானே இருக்கிறது;அதனால்,கால்சியம் இல்லாத உணவுகளை சாப்பிடலாம்;பால் போன்ற பொருட்களை விட்டு விடலாம் என்று சிலர் தவறான யோசனை சொல்வர்.அது மிகப் பெரிய தவறு.கால்சியம் கற்கள் என்பதால்,அது தொடர்பான உணவுகளை கைவிட்டுவிட்டால் வேறு வகையில் பாதிப்பு வரும்.கால்சியம் மாத்திரைகளை விழுங்குவோர் மட்டும்,அதை தவிர்க்கலாம்.இதற்கு டாக்டரின் யோசனை கேட்க வேண்டும். 

சிகிச்சை முறை

சிறுநீரக கற்கள் என்பது சிலருக்கு சிறிய அளவில் இருக்கும்.அவற்றை சில பயிற்சிகள்,மருந்தால் சரி செய்து விட முடியும்.சிலருக்கு பெரிதாக இருக்கும்.அதை அறுவை சிகிச்சை மூலம் மட்டும் தான் அகற்ற முடியும்.இப்போது இந்த வகை கோளாறுகளை சரி செய்ய நவீன சிகிச்சைகளும் வந்துவிட்டன.ஒலியை கிளப்பிக்கூட கற்களை கரையச் செய்யும் "லித் தோட் ரிப்சி "முறையும் உள்ளது.லேசர் கருவி மூலமும் கற்களை கரைக்கலாம்.ஆனால் இவற்றால்,சிறுநீரக திசுக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.சிலருக்கு "கோல்ப் " பந்து அளவுக்கு கூட சிறுநீரக கல் இருக்கலாம்.அதற்கு அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை.


1 comments :

நீ நான் at May 4, 2014 at 8:35 PM said...

அனைத்து நோய்க்கும் ஹீலர் பாஸ்கர் மருந்தில்லா மருத்துவம் சொல்கிறார்
அவசியம் பார்த்து பயன் அடையுங்கள்

http://anatomictherapy.org/

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes